ஒரே உருவத்தில் மூன்று குழந்தைகள் - 200 மில்லியனில் ஒருவருக்கு நடக்கும் அதிசயம்.

ஒரே உருவத்தில் மூன்று குழந்தைகள் - 200 மில்லியனில் ஒருவருக்கு நடக்கும் அதிசயம்.

ங்கிலாந்தில் ஒரே பிரசவத்தில் ஒரே முகத்தோற்றம் கொண்ட மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரிதான மற்றும் அசாதாரண நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வரும் இவ்வுலகில், ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறப்பது இயற்கையின் உண்மையான அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கருவுற்ற முட்டையில் மூன்று குழந்தைகள் பிறப்பது அரிதான நிகழ்வாகும். இதன் விளைவாக ஒரே கருமுட்டையிலிருக்கும் மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரியான மரபணு அமைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

க்வென், மார்வெல்லா மற்றும் ஏவலின் என பெயரிடப் பட்டுள்ள இந்த குழந்தைகள், ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றனர்.  200 மில்லியரில் ஒருவருக்கு தான் இந்த அதிசயமான நிகழ்வு நடக்குமாம். இக்குழந்தைகள் 9 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்ததால், சுமார் 6 வாரங்கள் ஸ்பெஷல் பேபி யூனிட்டில் வைக்கப்பட்டிருந்தனர். தற்போது தாய் குழந்தைகள் என அனைவருமே நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் மிகவும் அதிசயமானது என தன் மகிழ்ச்சியை விவரித்துள்ளனர் ஜேம்ஸ் மற்றும் ஜென்னி தம்பதியினர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது குறிப் பிடத்தக்கது. 

தங்களின் 12 வது வார ஸ்கேனில் உங்களுக்கு இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் பிறக்கும் என டாக்டர் கூறியபோது அவர்களால் நம்ப முடியாமல் வாயடைத்து விட்டதாக தெரிவிக்கும் தம்பதிகள், அதன் பின்னர் எடுக்கப்பட்ட 20வது வார ஸ்கேனில் மூன்று குழந்தையும் ஒரே மாதிரியான முகத்தோற்றத்தில் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்ததை நினைவுகூர்ந்தனர். 

"இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அனைத்து குழந்தை களையும் எப்படி சமாளிக்க போகிறேன் என யோசித்தேன். அந்த நேரத்தில் என்னுடைய உணர்ச்சிகள் கலவையாக இருந்தது. இந்த மூவருமே ஒரே நஞ்சுக் கொடியை பகிர்ந்து கொண்டிருப்பது, இவர்களை தனித்துவமாகக் காட்டுகிறது. எனக்கு நடந்த இரண்டு பிரசவங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருப்பது அரிதானது மற்றும் ஆச்சரியமானது" என ஜென்னி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

"இந்த மூன்று குழந்தைகளையும் அவர்களின் முந்தைய இரட்டை சகோதரர்களுக்கு காட்டும்போது, மிகவும் உற்சாகமாக இருந்தனர். என் 5 மகள்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள்தான் இவர்களைப் பெற்றெடுத்தோம் என நினைக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறோம்" என ஜேம்ஸ் கூறினார்.

இப்படி இரண்டு பிரசவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்து, அதுவும் குழந்தைகளின் முகத்தோற்றம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்ற அதிசய சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com