யானை மந்தைக்கு வழிவிடும் புலியின் நல்லிணக்கம்: அதிசயக் காணொலி!

யானை மந்தைக்கு வழிவிடும் புலியின் நல்லிணக்கம்: அதிசயக் காணொலி!

காட்டுக்குள் புலி அசகாய வேட்டை மிருகம் என்பது உண்மைதான், ஆனால் அவை கூட தங்களது வேட்டைத் தொழிலில் யானைகளுடன் குழப்பமடைய விரும்புவதில்லை. இவை இரண்டுக்குமான உறவினிடையே நிலவும் புரிதலானது அபாரமானதென சமீபத்திய காணொளி ஒன்றின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. இந்திய வனச் சேவை (IFS) அதிகாரி சுசந்த நந்தா பகிர்ந்துள்ள அந்தக் காணொளி, காட்டில் யானைக் கூட்டத்திற்குப் புலி வழி விட்டு ஒதுங்கி நிற்பதைக் காட்டுகிறது.

அந்தக் காணொளியில் யானைகள் குழு ஒன்று காட்டுப் பாதையில் கடந்து செல்வதைக் காண முடிகிறது, யானைகள் கடக்கும் அந்தப் பாதையின் குறுக்கே ஒரு புலி வருகிறது, அது யானைகளைக் கண்டவுடன், புதர் போன்று வளர்ந்திருக்கும் செடிகளில் மறைந்து ஒளிந்து வழிவிட்டுக் யானைகள் கடப்பதற்காகக் காத்திருக்கிறது. யானை மந்தை மெதுவாக முன்னேறுகிறது, அதன் உள்ளுணர்வுகளுக்குத் தெரியும் வழியில் புலி மறைந்து நிற்பது. புலியின் இருப்பை நுகர்ந்து கொண்டே அதைக்குறித்த அச்சங்களேதுமின்றி கவனத்துடனும் அசாதாரண நிதானத்துடனும் யானைகள் கடந்து செல்லும் காட்சி பிரமிப்பூட்டுகிறது.

யானைகள் முற்றாகக் கடந்து விட்டனவா என்று சோதிக்க புலி அந்தப்பாதையில் நடந்து பார்த்து உறுதி செய்து கொள்ள யத்தனிப்பது அந்த காணொளியின் ஹைலைட். புலி இருப்பதைக் பாராமல் அடுத்து ஒரு யானை வந்து விடுகிறது. உடனே அது புலியைப் பார்த்து அஞ்சி விடவில்லை. மாறாக எக்காளமிட்டுக் பிளிறி புலியை அச்சுறுத்தப் பார்க்கும் அதன் முனைப்பு விலங்குகளிடையே காட்டில் நிலவும் நல்லிணக்கத்தைப் பறைசாற்றுகிறது.

"விலங்குகள் இப்படித்தான் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொள்கின்றன மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுகின்றன... புலியின் வாசனையில் யானை எக்காளமிடுகிறது. காட்டு ராஜா டைட்டன்(புலி) யானைக் கூட்டத்திற்கு வழிவிடுகிறார்."

- என்ற குறிப்புடன் வன அதிகாரி தமது காணொளியைப் பகிர்ந்து கொண்டிருப்பது இன்னும் சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com