சூரிய கிரகணத்தில் நடை திறந்த திருநள்ளாறு கோவில்!

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

சூரிய கிரகணத்தில் அனைத்து கோவில்களிலும் நடைகள் அடைக்கப்பட்ட நிலையில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று சூரிய கிரகணத்தையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிரகணம் துவங்குவதற்கு முன்பாக அனைத்து கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டது.

மாலை சூரிய கிரசுணம் முடிந்த பின், பரிகார பூஜைகள் செய்து, இரவு, 7.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

திருநள்ளாறு கோவில்
திருநள்ளாறு கோவில்

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவிலில் நேற்று சூரிய கிரகண நேரத்திலும் நடை திறக்கப்பட்டு, அனைத்து வித பூஜைகளும் வழக்கம்போல் நடைபெற்றன.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை சூரிய கிரகணம் முடிந்த பின், கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்தகுளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

திருநள்ளாறு கோவிலில் தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீதர் பாரண்யேஸ்வரர் சுவாமி உருவானதால், இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். எனவே தான் திருநள்ளாறு கோவிலில் நடை சாத்தாமல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com