#BycottQatarAirways: ட்ரெண்டிங்கில் பிஜேபி ஹேஷ்டேக்!

#BycottQatarAirways: ட்ரெண்டிங்கில் பிஜேபி ஹேஷ்டேக்!

பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா, மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த சர்ச்சைக் கருத்துகளுக்கு பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  பிஜேபி கட்சி இந்த இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து நீக்கிய பின்பும் சர்ச்சை நீடித்து வருகிறது.

நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சைத் தொடர்ந்து அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரபு நாட்டு விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸை புறக்கணிக்கக் கோரி #BycottQatarAirways என்ற ஹேஷ்டேக்கை பிஜேபி  ஆதரவாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இது வைரலாகியுள்ளது. முன்னதாக லட்சக்கணக்கானோர் ட்ரெண்ட் செய்த இந்த ஹேஷ்டேக், Boycott என்பதற்கு பதில் Bycott என எழுத்துப் பிழையுடன் உருவாக்கப்பட்டது. இந்த ட்ரெண்ட் குறித்து கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் சதேக் தன் டிவிட்டரில் பதிவிட்டதாவது:

தங்கள் வாழ்நாளில் இதுவரை ஒருமுறைகூட விமான டிக்கெட் வாங்காதவர்கள் #BycottQatarAirways என ட்விட்டரில் எழுதுகிறார்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

எது எப்படியோ.. #BycottQatarAirways என்று எழுத்துப் பிழையுடன் பாஜகவினர் ட்ரெண்ட் ஆக்கிய ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com