காட்பரி சாக்லேட்
காட்பரி சாக்லேட்

#Boycottcadbury: காட்பரி சாக்லேட்டுக்கு எதிராக வைரலாகும் டிரெண்டிங்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காட்பரி நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரமும், அந்த காட்பரி சாக்லேட் தயாரிப்பில் மாட்டு இறைச்சி பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சை காரணமாக காட்பரீஸ் சாக்லேட்டை இந்தியாவில் தடைசெய்யக் கோரி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக காட்பரி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தை வெளியிட்டனர். அதில் தெருவோரத்தில் விளக்கு விற்பனை செய்யும் நபர் ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் காட்பரி சாக்லேட் பரிசு பெட்டியை வழங்குவார்.

அதில் அந்த விளக்கு வியாபாரியின் பெயர் தாமோதர் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். பிரதமர் மோடியின் தந்தை பெயரான தாமோதர் என்பதை வேண்டுமென்றே இந்த விளம்பரத்தில் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி, காட்பரி விளம்பரத்தைப் பதிவு செய்து அதில் பிரதமரின் தந்தையின் பெயரை இருளில் உள்ள கடைக்காரராகக் காட்டுவதற்காகவே வெளியிடப்பட்டது என்று குற்றம் சாட்டி கூறினார். மேலும் #Boycottcadbury என்ற ஹாஸ்டாக்கை இணைத்துப் பதிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #Boycottcadbury வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் தாயார் செய்யும் காட்பரியில் மாட்டு இறைச்சி இருப்பதாகக் கூறி பரலாகப் பேசப்பட்டது. அதற்கு காட்பரி நிறுவனத்திடம் இருந்து இந்தியாவில் சாக்லேட் சைவ முறையில் தான் தாயார் செய்யப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது அதனுடன் இணைந்து மாட்டு இறைச்சி வதந்தியும் ட்ரெண்டாகி வருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com