டூ வீலர் ஓட்டுநருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம்!

டூ வீலர் ஓட்டுநருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம்!

இது என்ன புதுசா?

பிகார் மாநிலத்தில் இரண்டு சக்கர வாகனம் வைத்திருக்கும் நபருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக சலான் அனுப்ப்ப்பட்டுள்ளது. அதுவும் எப்படித் தெரியுமா? சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சலான் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக பாதிக்கப்பட்ட நபர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிருஷ்ணகுமார் ஜா எனபவர் கூறுகையில். நான் இரு சக்கர வாகனமான ஸ்கூட்டி வைத்துள்ளேன். கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி வாராணசிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது போக்குவரத்துத் துறையிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அதில் எனக்கு ரூ.1,000 அபராதம் செலுத்துமாறு சலான் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த்து. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டூ வீலரில் சென்றபோது நான் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்னடா இது புதுசா போக்குவரத்து துறையினர் பைன் போடுகிறார்கள் என குழப்பத்திற்கு உள்ளானார் கிருஷ்ணகுமார். இதனிடையே கிருஷ்ணகுமார் ஜாவுக்கு தவறுதலாக பைன் அபராத சலான் அனுப்ப்ப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர். கம்ப்யூட்டரில் சலான் போடுவதில் தவறு நேர்ந்து விட்டதாகவும் போக்குவரத்து போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜாவுக்கு அனுப்பப்பட்ட சலான் போலீஸாரால் தயாரிக்கப்பட்டது. இப்போது நாங்கள் அவற்றை இ-சலானாக மாற்றி வருகிறோம். தவறு எங்கே நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கிறோம் என்று பிகார் போக்குவரத்து போலீஸ் அதிகாரி பல்வீர் தாஸ் கூறியுள்ளார்.

இதேபோல ஒரு சம்பவம் கடந்த பிப்ரவரி மாத்ததில் ஒடிஸா மாநிலத்திலும் நடந்துள்ளது. அபிஷேக் கர் என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோதிலும் அவர் சீட் பெல் அணியவில்லை என்று குறிப்பிட்டு போக்குவரத்து போலீஸார் ரூ.1,000 அபராதம் விதித்து சலான் அனுப்பியுள்ளனர். பின்னர் தமக்கு அனுப்பிய இ-சலானில் வேறு ஒருவரின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததாக அபிஷேக் ஓடிஸா டி.வி.க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவர் போக்குவரத்துத்துறை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்த தவறு குறித்து எடுத்துக் கூறி அபராதத்தில் இருந்து தப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com