UGC - NET தகுதித் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

UGC - NET தகுதித் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

UGC - NET தகுதித் தேர்வின் முதல் பகுதியாக 57 பாடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வாக நடைபெறும் நெட் தேர்வின் முதல் பகுதியாக 57 பாடங்களுக்குத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மைய நகரங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறையைப் பொறுத்த வரையில், பேராசிரியர்( Professor), இணை பேராசிரியர் (Associate Professor), உதவி பேராசிரியர் (Assistant Professor) ஆகிய மூன்று வகையில் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணைய முகவரியில் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பம் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

உதவி பேராசிரியர் மற்றும் JRF தகுதித் தேர்வாக UGC-யால் நடத்தப்படும் NET தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை அனைத்து பாடங்களுக்கு நடைபெறும். 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் தேர்வுக்கான அறிவிப்பு டிசம்பர் 29 ஆம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வுக்கு ஜனவரி 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்குத் தேர்வு மையத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் முதல் கட்டமாக நடக்கவுள்ள 56 பாடங்களுக்கான தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர் பதவிக்கு, முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; யுஜிசி (அல்லது) சிஎஸ்ஐஆர், அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பிஎச்டி பட்டம் பெற்றவர்களுக்கு நெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் அனுபவம் கொண்டவர், இணைய பேராசிரியர் பதவிக்கு தகுதியுடையவர். அதேபோன்று, குறைந்தது 10 ஆண்டுகள் இணைப் பேராசிரியராக பணி அனுபவம் கொண்டவர் பேராசிரியர் பதவிக்கு தகுதியுடைவர் ஆவார்.எனவே, உயர்க்கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக வர யுஜிசி நடத்தும் இந்த நெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com