உலக வங்கித் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள அஜய் பங்காவுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஆதரவு!

உலக வங்கித் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள அஜய் பங்காவுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஆதரவு!
Published on

உலக வங்கித் தலைவா் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அஜய் பங்கா பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

உலக வங்கித் தலைவர் பதவி நியமன பரிந்துரைப்பிற்கு மத்திய நிதி அமைச்சகம் அஜய் பங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கித் தலைவர் பதவி நியமன பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. உலகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாபெரும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தான் இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா.

அந்த செய்தியில், ‘நிதி, தொழில்நுட்பத் துறைகளில் அஜய் பங்காவின் அனுபவம், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும். வரும் தலைமுறையினருக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வறுமையை குறைக்கவும், உலகப் பொருளாதார சவால்களை கையாளவும், பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்கவும் உலக வங்கி பரிசீலித்து வரும் நிலையில், அஜய் பங்காவின் தோ்வு வலுசோ்க்கும்’ என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய உலக வங்கியின் தலைவராக டேவிட் மல்பாஸ் உள்ளார். இவர் விரைவில் அந்தப் பதவியில் இருந்து விலகவுள்ள நிலையில், புதிய தலைவராக இந்திய வம்சாவெளியை சேர்ந்த அஜய் பங்காவை நியமிக்க பரிந்துரைத்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.. பொருளாதார நெருக்கடி சூழலில் உலக வங்கியை அஜய் பங்கா திறன்பட வழி நடத்துவாா் என்றும் அவர் தெரிவித்திருந்தாா். அஜய் பங்கா இந்தியாவில் பிறந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அது மட்டும் அல்லாமல் பராக் ஓபாமா இவரை அதிபர் ஆலோசனை குழுவில் நியமித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளாா். அதற்கு முன் மாஸ்டா் காா்ட் நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளாா். 2016-இல் பத்மஸ்ரீ விருதையும் அஜய் பங்கா பெற்றுள்ளாா்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com