உச்சத்தில் யூ.பி.ஐ பரிவர்த்தனை - குறையும் டெபிட்கார்டு பயன்பாடு, இனி ஏ.டி.எம் முன்னால் கூட்டம் குறையும்!

உச்சத்தில் யூ.பி.ஐ பரிவர்த்தனை - குறையும் டெபிட்கார்டு பயன்பாடு, இனி ஏ.டி.எம் முன்னால் கூட்டம் குறையும்!

பத்தாண்டுகளுக்கு முன்னரே பணிகளை ஆரம்பித்தாலும் 2019ல்தான் யூபிஐ பரவலான கவனத்திற்கு வந்தது. 2016 முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த யூபிஐ பரிவர்த்தனைகள் ஜிபே, பேடிஎம் போன்ற ஆண்ட்ராய்ட் ஆப் பயன்பாட்டால் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றது.

2019ல் ஜிபேவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கூகிள் நிறுவனமே யூபிஐ மாடலை இந்தியாவைப் போல் அமெரிக்காவும் பின்பற்றுமாறு ஆலோசனை தெரிவித்தது. ஆரம்பித்தில் டெபிட் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும் என்றிருந்த நிலையில் சென்ற ஆண்டு ரூபே அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிரேடிட் கார்டு பரிவர்த்தனைகளை யூபிஐ வழியாக நடைபெற ஆரம்பித்தன.

சென்ற ஆண்டு இறுதிவரை நாடு முழுவதும் 385 வங்கிகள் யூபிஐ வசதியை ஏற்படுத்திக் கொடுத்தன. பீம், கூகிள் பே, போன்பே, பேடிஎம், தவிர அமேஸான் பே, யெஸ் பேங் உள்ளிட்ட தனியார் வங்கிகளின் ஆப் வழியாகவும் யூபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் யூபிஐ பரிவர்த்தனை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டிருக்கிறது. 2019 ஜனவரி மாதம் 673 மில்லியனாக இருந்த டிரான்ஸ்சாக்ஷன் எண்ணிக்கை, 2023ல் 8037 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டுடோடு ஒப்பிடும்போது இருமடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 12 கோடியே 98 லட்சம் ரூபாய் யூபிஐ மூலமாக டிரான்சாக்ஷன் செய்யப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு டிரான்ஸ்கஷன் அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. குறிப்பாக கொரானா தொற்றுக்குக்கு பின்னர் மாதம்தோறும் சராசரியாக 170 மில்லியன் முதல் 250 மில்லியன் வரையிலான கிரேடிட்கார்டு டிரான்ஸ்கஷன் நிகழ்ந்திருதுக்கிறது.

அதே நேரத்தில் டெபிட் கார்டு டிரான்ஸ்க்ஷன் பெருமளவுக்கு குறைந்திருக்கிறது. யூபிஐ, இண்டர்நெட் பேங்கிங் சேவைகள் அதிகமாகி இருபபதால் இனி டெபிட் கார்டு தேவை குறையும் என்கிறார்கள். டெபிட் கார்டு குறைந்தால் ஏ.டி.எம் சென்று பணமெடுக்கும் வழக்கமும் குறைந்துவிடும்.

இன்றைய நிலையிலேயே அத்தகைய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தினந்தோறும் ஏ.டி.எம் சென்று பணம் எடுப்பவர்கள் கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஏ.டி.எம்மை நாடுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தில் பல வங்கிகள் தங்களது ஏ.டி.எம் எண்ணிக்கையை குறைத்திருக்கின்றன.

5 ஜி தொழில்நுட்பம் பரவலாகும்போது, யூபிஎம் உள்ளிட்ட இணை வழி சேவைகள் உச்சத்தை அடையும். அப்போது ஏ.டி.எம் போய் பணம் எடுப்பது மக்களிடையே கணிசமாக குறைந்துவிடும். இதனால் கேஷ் டிரான்ஸ்க்ஷன் வெகுவாக குறையும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி உறுதியான அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com