வாகனங்களை நிறுத்தி வேட்டையில் ஈடுபடும் வசூல் ராஜா…!

வாகனங்களை நிறுத்தி வேட்டையில் ஈடுபடும் வசூல் ராஜா…!

இந்தியாவில் வனவிலங்குகள் பாதுகாப்பாக வாழ எத்தனையோ தேசிய பூங்காக்களும், வனவிலங்கு சரணாயலயங்களும் உள்ளன. நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொடர்புகள் இருக்கின்றன.

அப்படி தொடர்புள்ள ஒரு சம்பவம்தான் இந்த விடியோ. வைரலாக வெளிவந்துள்ள இந்த விடியோவில், ஒரு யானை சாலையில் கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறித்து சுங்கக் கட்டணம் வசூலிப்பதுபோல் கரும்புகளை எடுத்துச் சுவைக்கிறது.

சமூக வலைத்தளங்களை அடிக்கடி பயன்படுத்தும் டாக்டர் அஜயிதா என்பவர் இந்த விடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விடியோவின் கீழ “ சுங்கம் வசூலிக்கும் யானை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சில நிமிடங்களே ஓடும் இந்த விடியோவில் ஒரு யானை சாலையில் நின்று கொண்டு கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழி மறித்து அதிலிருந்து கரும்புகளை சுங்கம் வசூலிப்பதுபோல் எடுத்து சாப்பிடுகிறது.

இந்த விடியோவை 2,30,000 பேர் பார்வையிட்டுள்ளனர். சுமார் 1,000 பேர் டுவிட்டரில் மறுபதிவிட்டுள்ளனர். 6,000 பேர் லைக்ஸ் போட்டுள்ளனர்.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் தொடர்புடைய இந்த விடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

“அந்த யானைக்கு பேராசையில்லை. தனக்கு வேண்டிய உணவை எடுத்துக் கொண்டு வாகனம் தொடர்ந்து செல்ல வழிவிடுகிறது” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

“வாகனத்தை இயக்குபவரும் யானையை கடந்து செல்ல நினைக்காமல் யானையின் செயலுக்கு ஒத்துழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று வேறு ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

“சர்க்கரை ஆலைகளுக்கு வெட்டி எடுத்துச் செல்லப்படும் கரும்பு தரமானவையா என்று சோதிக்கிறதோ இந்த யானை” என்று மூன்றாவது நபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், “எச்சரிக்கை… யானைகள் கடந்து செல்லும் இடம்” என்று விளம்பரப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்க்கும்போது, இந்த விடியோ தாய்லாந்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com