திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது!

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது!

இன்று திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது . 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. தற்போது வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவுகள் காலை முதலே பரபரப்பாக இயங்கி வருகிறது.

திரிபுராவில் 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் 259 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அவர்களில் 20 பெண் வேட்பாளர்களும் அடங்குவர். அதிகபட்சமாக பா.ஜ.க. 12 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.பாஜக ஆட்சி தான் இங்கு தற்போது நடைபெற்று வருகிறது .

திரிபுரா மக்கள் வாக்கு அளிக்க 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,100 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளளன. 28 மிகவும் பதற்றமானவை.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. 60 இடங்களை கொண்டுள்ள சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தான் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் பா.ஜ.க. கட்சி முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க., மாநிலக்கட்சியான ஐ.பி.எப்.டி. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

மற்றொரு மாநிலக்கட்சியான திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது. திரிணாமுல் காங்கிரசும் 28 இடங்களில் போட்டி போடுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வர கால அவகாசம் இருக்கிறது. மற்ற மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா தேர்தல்கள் முடிந்ததும் , அந்த மாநிலங்களுடன் சேர்த்துத்தான் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com