“WFI தலைவரைக் கைது செய்யும் வரை ஜந்தர் மந்தரை விட்டு வெளியேற மாட்டோம்” இந்திய முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி இந்திய முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்ட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், ஏஸ் இந்தியா மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் ஊடகங்களுடன் உரையாடும் போது உடைந்து போனார்.
ஊடக செய்திகளின் படி சாக்ஷி மாலிக், ஒரு மைனர் உட்பட ஏழு பெண் மல்யுத்த வீரர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் ப்ரிஜ் பூஷன் மீது புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை.
"விசாரணை விரைவாக நடக்க வேண்டும்...எங்களால் தாங்க முடியாத பொய்யர்களாகக் கட்டமைக்கப்படுகிறோம். இரண்டரை மாதங்களாக காத்திருக்கிறோம் ஆனால் யாரும் கேட்கவில்லை. இத்தனை இடர்களுக்கு நடுவிலும் நாங்கள் மிகக்கடினமாக முயன்று இப்போதுதான் CWG 2022ல் பதக்கம் வென்றோம்" நாங்கள் பலத்தை செலவழிக்கிறோம் என்று மக்கள் கூறுகிறார்கள், அதனால் தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று ஜந்தர் மந்தரில் ஊடகங்களிடம் சாக்ஷி மாலிக் கூறினார்.
இதற்கிடையில், போராட்டக்குழுவினருள் ஒருவரும், காமன்வெல்த் விளையாட்டு (CWG) போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான வினேஷ் போகத் ஊடகங்களிடம் பேசுகையில், பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் எழுப்பிய புகார்கள் தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் அல்லது மேற்பார்வைக் குழுவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
"எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் இங்கேயே போராடி, இங்கேயே தூங்கி இங்கேயே சாப்பிடப் போகிறோம். நாங்கள் அவர்களைத் (விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளை) தொடர்பு கொள்ள மூன்று மாதங்களாக முயற்சித்து வருகிறோம். குழு உறுப்பினர்கள் எங்களுக்கு பதிலளிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் இந்தப் பிரச்சனை குறித்து எதுவும் பேசவில்லை, அவர்கள் எங்கள் அழைப்பைக் கூட எடுக்கவில்லை. நாங்கள் நாட்டிற்காக பதக்கங்களை வென்றுள்ளோம், இதற்காக எங்கள் வாழ்க்கையை பணயம் வைத்துள்ளோம்" என்று வினேஷ் போகத் கூறியதாக காட்சி ஊடகங்கள் மேற்கோள் காட்டுகின்றன.
"பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்" என்று ஒரு சிறந்த மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஊடகங்களிடம் கூறினார்.
இதற்கிடையில், பிரிஜ் பூஷன் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், சில ஊடகங்கள், பல உலகப் பதக்கம் வென்றவர்களை மேற்கோள் காட்டி, குழப்பத்தில் உள்ள WFI தலைவருக்கு க்ளீன் சிட் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த பெண் மல்யுத்த வீரர்களை தவறாகச் சித்தரிக்கவும், அவர்களை குற்றவாளிகளாக நிரூபிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டின.
பஜ்ரங் புனியா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்துவதற்கு காரணம், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க WFI மற்றும் விளையாட்டு அமைச்சகம் இரண்டுமே இதுவரை எதுவும் செய்ய முயற்சிக்கவில்லை என்றும், அதனால் தான் மல்யுத்தத்தை காப்பாற்ற மல்யுத்த வீரர்களே இங்கு வந்துள்ளனர் என்றும் கூறினார்.
இந்திய மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், ரவி தஹியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர், பிரிஜ் பூஷனை தலைமை அலுவலகத்தில் இருந்து நீக்க வேண்டும் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்று கோரி இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜந்தர் மந்தரில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அவர்கள் WFI நிர்வாகம் மற்றும் அதன் தலைவர் இரு தரப்புமே மல்யுத்த வீரர்கள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதோடு அவர்கள் மல்யுத்த வீரர்களை தவறாக நடத்துவதாகவும் வீரர்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டத்தைத் தொடர்ந்து, ஜனவரி மாதம், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானதூ, இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் அதன் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பிற பயிற்சியாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க 'மேற்பார்வைக் குழு' அமைப்பதாக அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் பணி அக்குழுவுக்கு வழங்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோம் கண்காணிப்புக் குழுவின் தலைவராக உள்ளார். முன்னாள் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் ஷட்லர் த்ருப்தி முர்குண்டே, SAI உறுப்பினர் ராதிகா ஸ்ரீமன், இலக்கு ஒலிம்பிக் மேடை திட்டத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் ராஜகோபாலன் மற்றும் CWG தங்கப் பதக்கம் வென்ற பபிதா போகத் ஆகியோர் மேரி கோம் தலைமையிலான குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
முன்னதாக ஏப்ரல் மாதம், இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள் என்று புனியா கூறினார்.
"குற்றச்சாட்டுகளை விசாரிக்க விளையாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், அதன் இறுதி அறிக்கையுடன் உடன்படவில்லை என்று சமீபத்தில் ஒரு செய்தி அறிக்கை கூறியது.
ஒரு குழு உறுப்பினர் அறிக்கை சமர்ப்பிப்பில் ஈடுபடவில்லை மற்றும் அறிக்கையுடன் உடன்படவில்லை என்றால், அறிக்கையை எப்படி நம்புவது என்று புனியா கேட்டார். அந்த அறிக்கை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூட எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு ஸ்டிங் ஆபரேஷனில் பெண் மல்யுத்த வீரர்கள் அளித்த அறிக்கைகளை WFI பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் குழு நிரபராதி என்றால், வெளிப்படைத் தன்மை மூலம் யார் சரி அல்லது தவறு என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் புனியா ஊடகங்களிடம் கூறினார்.
அவர்கள் (மல்யுத்த வீரர்கள்) மீண்டும் ஒருமுறை எதிர்ப்பைத் தொடங்குவார்கள், கூடிய விரைவில் உயர் நீதிமன்றத்திற்கு கூட செல்வோம் என்று ஒரு மல்யுத்த வீரர் கூறினார்.
"நாங்கள் எங்கள் விளையாட்டை தொடர வேண்டும், ஆனால் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து விரைவில் உயர் நீதிமன்றத்திற்கு செல்வோம்" என்று புனியா கூறினார்.