ஆகஸ்ட் 7ல் இந்திய மல்யுத்த வீர்ரகள் சம்மேளனத் தேர்தல்!

ஆகஸ்ட் 7ல் இந்திய மல்யுத்த வீர்ரகள் சம்மேளனத் தேர்தல்!

தொடர்ந்து பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீர்ர்கள் சம்மேளனத் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்திய மல்யுத்த வீர்ர்கள் சம்மேளனத் தேர்தல் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அஸ்ஸாம் மல்யுத்த வீர்ர்கள் சங்கம் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என்று கோரி நீதிமன்றம் சென்றதை அடுத்து, குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ஜூலை 11 தேர்தலுக்கு தடைவிதித்த்து.

வாக்களிக்கும் உரிமையுடன் இந்திய மல்யுத்த வீர்ர்கள் சம்மேளனத்துடன் இணைந்த உறுப்பினராக இருக்க உரிமை உண்டு என்று மாநில சங்கம் கூறியது. ஆனால், அதன் செயற்குழு 2014 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அதை பரிந்துரைத்த போதிலும் தேசிய சம்மேளனம் அங்கீகரிக்க மறுத்துவிட்டது.

தேர்தலில் போட்டியிடுவோர் விண்ணப்பிக்க கடந்த ஜூன் மாதம் 25 கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குவாஹாட்டி உயர்நீதிமன்றம் தேர்தல் நடத்துவதற்கு தடைவிதித்துவிட்டது. இந்த நிலையில் கடந்த செவ்வாக்கிழமை உச்சநீதிமன்றம், குவாஹாட்டி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவித்தது.

இந்திய மல்யுத்த வீர்ர்களின் சம்மேளனத்தின் செயல்பாடுகளை விளையாட்டுத்துறை அமைச்சகம் நிறுத்திவைப்பதற்கு முன்னதாக மே 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மல்யுத்த வீர்ர்கள் சம்மேளனத்தில் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேற்பார்வைக் குழுவை அமைக்க முடிவு செய்த விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய மல்யுத்த வீர்ர்கள் சம்மேளனத்தில் செயல்பாடுகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.தில்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீர்ர்கள், வீராங்கனைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், அனுராக் தாகுர், மல்யுத்த வீர்ர்கள் சம்மேளனத் தேர்தல் ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம் ஜூலை 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால், தேர்தல் அதிகாரி ஜூலை 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.எனினும் ஐந்து இணைக்கப்படாத மாநில அமைப்புகள் தங்களுக்கு வாக்குரிமை உரிமை உண்டு என்று கோரியதை அடுத்து ஜூலை 11 தேர்தல் தேதியாக அறிவிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com