குடியரசுத் தலைவரின் தமிழக விஸிட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்?

குடியரசுத் தலைவரின் தமிழக விஸிட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்?

நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தாம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் போட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த சமயம் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தார்.

அதன் பிறகு தேர்தலில் வென்று குடியரசுத் தலைவராகப் பதவியேற்றதின் பின் தமிழ்நாட்டிற்கு அவரது முதல் வருகை இதுவே. சிவராத்திரியை முன்னிட்டு கோவை, ஈஷா தியான மையம் நடத்தும் மாபெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தவிருப்பதாக குடியரசுத் தலைவர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி கடந்த முறை பிரதமராகப் பதவி ஏற்ற பின் தமிழகம் வந்த போது மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தியதை இங்கே நாம் நினைவு கூரலாம். தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாட்டின் குடியரசுத் தலைவர் வருகை தர இருப்பதை அப்பகுதி மக்கள் பெருமையாகக் கருதுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com