என்ன கொடுமை சரவணா... அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரமா? அப்புறமா என்ன நடந்தது தெரியுமா?
அபராதம் ரூ. 250தான். ஆனால் ஜாமீனுக்கு ரூ. 25 ஆயிரம் என்றதும், கடுப்பான பயணி ஒருவர் ஜெயிலுக்கு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10ம் தேதி லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று மும்பை நகருக்கு வந்தது. அதில் பயணிகளில் ஒருவராக பயணி ரத்னகர் திவேதி என்பவரும் பயணித்த நிலையில், அவர் விமான கழிவறையில் புகைப்பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், விமானத்தில் மற்ற பயணிகளுடன் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, அவரை அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்த, அவர் ரூ.25 ஆயிரம் பிணையில் அவரை ஜாமீனில் விடுவித்தார். ஆனால், ரத்னகர் திவேதி, "மற்றருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், சட்டப்பிரிவு 336-ல் வழக்குப்பதிவு செய்தால் அதற்கு ரூ.250 தான் அபராதம் என்று ஆன்லைனில் பார்த்தேன். வேண்டுமானால் அந்த அபராதத்தை நான் செலுத்துகிறேன். ஆனால், ஜாமீனுக்கு பிணையாக ரூ.25 ஆயிரம் எல்லாம் செலுத்தமுடியாது. அதுக்குப் பதிலாக நான் ஜெயிலுக்கே செல்வேன்" என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மாஜிஸ்திரேட்டு ரத்னகர் திவேதியை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
அபராதமே 250 ரூபாய்தான். அதனால் ஜாமீனுக்கெல்லாம் 25 ஆயிரம் ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது என கூறி, அதுக்குப்பதிலாக ஜெயிலுக்குப் போன விமான பயணி குறித்த விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.