ராகுலுக்கு சிறை தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் வினா!

ராகுலுக்கு சிறை தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் வினா!

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘மோடி’ பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அம்மாநில அரசு அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது.

இதனை எதிர்த்து குஜராத் நீதித்துறை அதிகாரிகளான ரவிக்குமார் மேத்தா மற்றும் சச்சின் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ‘பணி மூப்பு அடிப்படையை முறையாகப் பின்பற்றாமல் இட ஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வழங்கப்படுவது சட்ட விரோதமானது’ என்று அவர்கள் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் அவசர கதியில இந்தப் பதவு உயர்வுகள் வழங்கப்பட்டது ஏன் என்றும், பதவி உயர்வில் சீனியாரிட்டி முறை இதில் பின்பற்றப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த மனு குறித்து மாநில அரசு செயலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தவிட்டு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com