#Breaking குஜராத்தை கைபற்றுமா ஆம் ஆத்மி? முதல்வர் வேட்பாளராக ஊடகவியலாளர் இசுதன் காத்வி!

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி

டில்லியில் இரண்டாவது முறையாக ஜெயித்து ஆட்சி நடத்தி வருபவர் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதன்பிறகு பஞ்சாப்பை குறிவைத்து காய்நகர்த்தி ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. அதில் நகைச்சுவை நடிகராக இருந்த பசந்த் மான் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தல் மீதும் ஒரு கண்ணை வைத்து வருகிறார்.

ஆம்ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட நகர்வாக குஜராத்தின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இசுதன் காத்வி குஜராத் சேனலின் ப்ரபல ஊடகவியலாளர் ஆவார். இவர் ஏற்கனவே குஜராத் மக்களிடையே அறிமுகமானவர். ஏற்கனவே ப்ரபலமான இசுதன் காத்வி தற்போது குஜராத் முதல்வர் வேட்பாளராகியது குஜராத் மக்களிடையே மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இசுதன் காத்வி
இசுதன் காத்வி

இசுதன் காத்வி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இசுதன் காத்வி சமூகத்தை சேர்ந்தவர். குஜராத்தில் காத்வி சமூக மக்கள் 48% பேர் உள்ளனர். இதனால் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கலாம் என கருதிய அரவிந்த் கெஜ்ரிவால் அவரை முதல்வர் வேட்பாளராக்கியிருக்கலாம். இசுதன் காத்வி ஆம்ஆத்மி கட்சியில் சில மாதங்களுக்கு முன்பு தான் சேர்ந்திருக்கிறார். அவர் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்த பிறகு பலரும் அக்கட்சியில் இணைந்திருப்பதாக சொல்கிறது ஆம்ஆத்மி வட்டாரம்.

மேலும் ஆம்ஆத்மி கட்சியில் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி சும்மா வரவில்லை. அக்கட்சியில் நடந்த உள்கட்சி தேர்தலில் சுமார் 78% வாக்குகளை பெற்றே ஆம்ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுததியதால் எதிர்கட்சிகளின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என பொறுத்திருந்தே பார்க்கமுடியும்.

ஊடகவியலாளர் இசுதன் காத்வி குஜராத் மக்கள் பலரிடையே ப்ரபலம் என்பதால் குஜராத்தில் ஆம்ஆத்மி தட்டி தூக்குமா? எனினும் குஜராத் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஆம்ஆத்மி குஜராத்தில் தனது ஹேட்ரிக் வெற்றியை பெற்று ஆட்சி அமைக்குமா ? பார்க்கலாம். அங்கு இதனால் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

இது எதிர்கட்சிகளிடையேயும், அரசியல் ஆர்வலர்களிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ குஜராத் தேர்களம் தற்போது அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே நிஜம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com