மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கு DA நிலுவைத் தொகை! 7வது சம்பள கமிஷனில் ?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA நிலுவைத் தொகை! 7வது சம்பள கமிஷனில் ?

7வது சம்பள கமிஷனில் 18 மாத கால DA நிலுவைத் தொகை குறித்து முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) நான்கு சதவீதம் அதிகரித்து, தற்போதுள்ள 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக மத்திய அரசு அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புள்ளது. இதனால் 47.68 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்ச ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். இந்த அறிவிப்பால் மத்திய அரசுக்கு வருடம் 6,591.36 கோடி ரூபாய் கூடுதல் நிதிச் சுமை உருவாகும்.

மத்திய அரசு ஊழியர்களின் தரவுகள் படி லெவல் 3 பிரிவு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை அளவு 11,880 ரூபாயில் இருந்து 37,554 ரூபாயாக இருக்கும். இதுவே லெவல் 14 பிரிவு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை அளவு 1,44,200 ரூபாயில் இருந்து 2,18,200 ரூபாயாக இருக்கும்.

அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு, பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா பிடிஐ செய்தியாளர்களிடம் பேசுகையில் டிசம்பர் 2022க்கான சிபிஐ-ஐடபிள்யூ ஜனவரி 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அகவிலைப்படி உயர்வு 4.23 சதவீதமாக உள்ளது. இதனால் DA அளவு 4 சதவீத புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் தாக்கத்துடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA உயர்த்துவதற்கான திட்டத்தை உருவாக்கி வருகிறது என கூறியுள்ளார்.

தற்போது உயர்த்தப்படும் DA உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 38 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.

மத்திய அரசு ஏற்கனவே அகவிலைப்படி அளவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், பொருளாதாரம், வர்த்தகம், நாணய மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையிலும் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவை அகவிலைப்படி தொகையை மொத்தமாக அளிக்க முடியாது..

இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை 3 தவணைகளில் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத காலம் கொரோனா தொற்றுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை அளிக்கப்படாமல் உள்ளது.

இந்த 3 தவணை திட்டமும் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com