மல்யுத்த வீரர் கவுசல் பிபாலியா
மல்யுத்த வீரர் கவுசல் பிபாலியா

100-க்கு மேற்பட்ட பெண்களிடம் அத்துமீறிய மல்யுத்த வீரர்!

குஜராத்தின் தங்கப்பதக்கம் வென்ற பிரபல மல்யுத்த வீரரான கவுஷல் பிபாலியா , அங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் யோகா ஆசிரியாராக பணிபுரியும் பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், லிஃப்டில் தான் சென்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சுமார் 1500 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பல பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்தது அம்மாநிலத்தின் பிரபல மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை குஜராத் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் அவர் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் முகமூடி அணிந்துகொண்டு பாலியல் சீண்டல் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா, குஜராத்தில் மாநில அளவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 74 கிலோ பிரீ ஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com