ஜிகா வைரஸ்
ஜிகா வைரஸ்

கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ்!

Published on

கர்நாடகாவில் 5 வயது சிறுமி ஒருவர் ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புனே ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 5 வயது சிறுமி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நடாக அரசு மாநிலத்தில் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள எங்கள் துறை தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.

முன்னதாக புனேவில் நாசிக் நகரில் 67 வயது நபர் ஒருவருக்கு கடந்த மாத இறுதியில் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. ஜிகா வைரஸ் கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது.. இது ஏடிஸ் கொசுவால் பரவுகிறது என்று குறிப்பிடப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com