
உலக அளவில் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்த மொபைல் செயலிகள் தான் பயன்பாட்டில் உள்ளன. வாட்ஸ்அப், கூகுள், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பல அமெரிக்க செயலிகளை இந்தியர்கள் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் வரி விதிப்பு பிரச்சினையால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு பொருட்களை தவிர்த்து விட்டு, இந்தியப் பொருட்களை உபயோகிக்குமாறு பிரதமர் மோடி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி, இந்திய அளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக 2021ல் அறிமுகமான அரட்டை செயலிக்கு தற்போது தான் இந்தியர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் கூகுள் மேப் செயலிக்கு போட்டியாக மேப்பிள்ஸ் (Mappls) செயலியை களத்தில் இறக்கியுள்ளது மேப் மை இந்தியா நிறுவனம்.