ரிஷப் பண்டிற்காக சாமி கும்பிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

ரிஷப் பண்டிற்காக சாமி கும்பிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
Published on

மீபத்தில் கார் விபத்தில் பலத்த காயமடைந்த, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சைப்பெற்று வந்தார்.  அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து அங்கு அவருக்கு எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் ரிஷப் பண்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார்  என கூறப்படும் நிலையில், தசைநார்கள் அதிகளவில் காயம் அடைந்திருந்ததால், தசைநார்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுவாக தசைநார்கள் 4 முதல் 6 மாதங்களில் குணமாகும். அதுமட்டுமின்றி அவ்வப்போது மருத்துவரின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி யுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். 

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இந்தூர் வந்துள்ளனர்.

இந்தூர் வந்த இந்திய அணி வீரர்களில் சிலர் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ’’சூர்யகுமார் யாதவ் கூறியதாவது, நாங்கள் ரிஷப் பண்டிற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்தோம். அவர் திரும்ப அணிக்கு வருவது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது’’ என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com