
"ஜப்பானின் சிறப்புத் திறமையும், இந்தியாவின் பெரிய சந்தையும் இணைந்தால், அது ஒரு மிகச்சிறந்த கூட்டுறவையும், இரு நாடுகளின் வளர்ச்சிக்குமான வழியையும் உருவாக்கும்" - பிரதமர் மோடி.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பகுதியின் அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஜப்பான் ஒரு முக்கிய துணையாக உள்ளது. ஜப்பானின் சிறப்பும், இந்தியாவின் பெரிய சந்தையும் இணைந்து ஒரு சிறந்த உறவை உருவாக்க முடியும்" என்று தெரிவித்தார்
முக்கிய அம்சங்கள்:
முதலீடுகளுக்கு ஏற்ற நாடு:
இந்தியா அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை கொண்ட முதலீட்டுக்கு ஏற்ற நாடாக மாறியுள்ளது.
இந்தியாவில் முதலீடுகள் பல மடங்கு பெருகும் என்றும், வெகுவிரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு:
செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி (செமிகண்டக்டர்), குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக்னாலஜி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மோடி பேசினார்.
உலகளாவிய தெற்கு நாடுகளுக்குத் தலைமை:
இந்தியாவும் ஜப்பானும் இணைந்து 'உலகளாவிய தெற்கு' (Global South) நாடுகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஆப்பிரிக்காவில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
பரஸ்பர நம்பிக்கை:
மெட்ரோ ரயில் திட்டங்கள் முதல் உற்பத்தித் துறை வரை, குறைக்கடத்திகள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, இந்தியா-ஜப்பான் கூட்டுறவு பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.