சர்வதேச சந்தையில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில், ஐடி துறையில் மிகப்பெரிய ஜாம்பவான் கம்பெனிகள் கூட பணி நீக்கம் செய்து வருகின்றது. இந்திய ஐடி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இந்திய ஐடி நிறுவனம் ஒன்று புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்திய ஹெச்சிஎல் டெக் நிறுவனம் தான் அது .
ஹெச் சி எல் டெக் நிறுவனம் ரோமானியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ரோமானியாவில் அதன் செயல்பாட்டினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், புதிய புதிய பட்டதாரிகளை பணியமர்த்தி வருகின்றது. இதற்காக முன்னணி ரோமானியன் பல்கலைக் கழங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் தேவையான பட்டதாரிகளை பணியமர்த்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக ரோமானியாவில் தனது கம்பெனி செயல்பாட்டினை கொண்டுள்ள ஹெச் சி எல் டெக், நாடு முழுவதும் உள்ள 1000 ஊழியர்களுக்கு மேலாக கொண்டுள்ளது. இங்கிருந்து பல சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை செய்து வருகின்றது. அதிகரித்து வரும் தேவைகளுக்கு மத்தியில் உள்நாட்டு திறமைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரோமானியாவின் இந்த அலுவலகத்தில் மாணவர்களுக்கு இண்டர்ஷிப் பயிற்சி மற்றும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி என அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் பல பதவிகளுக்கு பிரெஷ்ஷர்களை பணியமர்த்தி வருகின்றது. ஹெச் சி எல் டெக் நிறுவனம் ரோமானியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..