நான்காவது முறையாக கோப்பையை தட்டி தூக்கிய இந்திய ஜூனியர் ஹாக்கி அணி!

நான்காவது முறையாக கோப்பையை தட்டி தூக்கிய   இந்திய ஜூனியர் ஹாக்கி அணி!
Published on

தொடர்ந்து நான்காவது முறையாக ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை 2023 ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையைத் தட்டி தூக்கி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஓமன் நாட்டிலுள்ள சலாலா நகரில் நடைபெற்றது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சீன தைபே அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென் கொரியா,வங்கதேசம், ஓமன், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

கடந்த மாதம் 23 ஆம் தேதி 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் தொடங்கியது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை 2023 ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிப்போட்டியில் இந்தியா 2 கோல்களையும், பாகிஸ்தான் ஒரு கோலையும் அடித்தன. போட்டி தொடங்கிய 13 ஆவது நிமிடத்தில் அங்கத் பிர் சிங்கும், 20ஆவது நிமிடத்தில் அரைஜீத் சிங் ஹுன்டாலும் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு வலு சேர்த்தனர்.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வாகை சூடியுள்ளது. கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணியினை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்த வெற்றியை பெற்றதன் மூலம் இந்தியா பெற்ற ஜூனியர் ஹாக்கி கோப்பைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2004, 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஜூனியர் ஆசியக் கோப்பையை இந்தியா வென்றிருந்தது. ஜூனியர் ஆசியக் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஆடவர் அணிக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com