புரோட்டீன் ஷேக் குடித்து பலியான இந்திய வம்சாவளி சிறுவன்.. இங்கிலாந்தில் அதிர்ச்சி!

புரோட்டீன் ஷேக் குடித்து பலியான இந்திய வம்சாவளி சிறுவன்.. இங்கிலாந்தில் அதிர்ச்சி!
Editor 1
Published on

ங்கிலாந்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புரோட்டீன் ஷேக் பவுடர் குடித்து பலியான சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

முந்தைய காலங்களில் நவதானியங்களே கூழாகவும், சத்துமாவாகவும் பொதுமக்கள் உட்கொண்டனர், ஆனால், தற்போதைய உணவு பழக்கங்கள் மாறியதால் பொதுமக்கள் ஊட்டச்சத்திற்காக பலவற்றை தேடி செல்கின்றனர். அப்படி ஒன்று தான் இந்த ப்ரோட்டீன் பவுடர். இந்த ப்ரோட்டீன் பவுடரால் உயிரிழந்த சிறுவனின் கதை குறித்து பார்க்கலாம்.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, மேற்கு லண்டனில் உள்ள ஈலிங் மாவட்டத்தில், ரோஹன் கோதானியா என்ற 16 வயது சிறுவன் புரோட்டீன் ஷேக்கை உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டு இறந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ரோஹனின் மரணம் குறித்த சமீபத்திய நீதி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியகி உள்ளது.

அதில் ப்ரோட்டீன் ஷேக் குடித்ததால் அந்த சிறுவனுக்கு ஒரு அரிய மரபணு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது மீள முடியாத மூளை பாதிப்புக்கு வழிவகுத்தது என்றும், இறுதியில் அவரது உயிரைப் பறித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரோஹன் மிகவும் ஒல்லியாக இருந்ததால் அவரின் உடலை கொஞ்சம் பருமனாக்க, அவரது தந்தை ப்ரோட்டீன் ஷேக்கை வாங்கி கொடுத்துள்ளார். அதனை உட்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, ரோஹனின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவர் அவசரமாக வெஸ்ட் மிடில்செக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

துரதிர்ஷ்டவசமாக 3 நாட்களுக்குப் பிறகு, அவர் மீள முடியாத மூளை பாதிப்புக்குள்ளானார். ரோஹனின் மரணத்திற்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை. இதனால், சிறுவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இந்த நிலையில், சமீபத்திய நீதித்துறை விசாரணை ரோஹனின் மரணத்திற்கான அடிப்படைக் காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது, இது ஆர்னிதின் டிரான்ஸ்கார்பமைலேஸ் (ornithine transcarbamylase - OTC) குறைபாடு எனப்படும் அரிய மரபணு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை, புரோட்டீன் மில்க் ஷேக்கின் அதிக புரத உள்ளடக்கத்தால் தூண்டப்பட்டு, ரோஹனின் இரத்த ஓட்டத்தில் அம்மோனியாவின் அதிகப்படியான முறிவுக்கு வழிவகுத்தது. மேலும் இது ஆபத்தான அளவை எட்டியது. இந்த விவரம் முன்பு மில்டன் கெய்ன்ஸ் நீதிமன்ற விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிகாரிகள், ஒழுங்கு முறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ப்ரோட்டீன் பானங்களில் பாக்கெட்டுகளில் எச்சரிக்கைகளை சேர்ப்பது அவசியம் என வலியுறுத்தினர். மேலும், OTC என்பது ஒரு அரிதான நிலை என்றாலும், குறைபாடுள்ள ஒருவர் அத்தகைய பானத்தை உட்கொண்டு, புரதச்சத்து அதிகரிப்பை அனுபவித்தால் அது தீங்கு விளைவிக்கும் என்று கூறினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com