உலக நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளிகள் : எலான் மஸ்க் பாராட்டு!

உலக நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளிகள் : எலான் மஸ்க் பாராட்டு!

உலகின் மிக முக்கிய 21 பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஆய்வு அறிக்கைக்கு டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வோர்ல்டு ஆப் ஸ்டேட்டஸ்டிக்ஸ் நிறுவனம் உலகளாவிய பன்னாட்டு பெரும் நிறுவனங்களை ஆய்வு செய்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி இயங்கி வரும் மிகப்பெரிய 21 பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களினுடைய தலைமை நிர்வாக அதிகாரிகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

அறிவு, அனுபவம், திறமை, தலைமைத்துவம் காரணமாக இவர்கள் இந்த பொறுப்பை அடைந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஆல்பாபெட் தலைவர் சுந்தர் பிச்சை தொடங்கி மைக்ரோசாப்ட், யூடியூப், அடோப், ஸ்டார் பாக்ஸ், காக்னிசண்ட், மைக்ரோன் டெக்னாலஜி என்று உலகம் முழுவதும் இயங்கக்கூடிய மிக முக்கிய நிறுவனங்களில் இந்தியம்சாவளியினர் இடம்பெற்ற உள்ளனர்.

மேலும் சத்திய நாதெள்ளா, நீல் மோகன், சாந்தனு நாராயண் ஆகியோர் தொழில்நுட்ப சார்ந்த நிறுவனங்களிலும், அஜய் பங்கா உலக வங்கி குழுமத்தின் 14வது தலைவராகவும் செயல்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக சந்தை மதிப்பில் குறிப்பிடப்பட்ட இந்த நிறுவனங்கள் பெரும்பாலான பங்கு மதிப்பை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனங்கள் என்றும், மேலும் இந்த நிறுவனங்கள் உலகை இயக்கிக் கொண்டிருக்கக் கூடிய மிக முக்கிய துறைகளை தனக்குள் வைத்து செயல்படக்கூடிய நிறுவனங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இந்த நிலையில் வோர்ல்டு ஆப் ஸ்டேட்டஸ்டிக்ஸ் நிறுவனத்தின் அறிக்கை குறித்து கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு, இம்பரஸிவ் என்று பதில் அளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com