

இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் யூசர்கள் இருக்காங்க. இவர்கள் எல்லாரோட டிஜிட்டல் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கு.
அதுதான், இனி புதுசா வரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் ஒரு அரசுச் செயலி கட்டாயம் இருக்கணும்.
அந்தச் செயலியைப் பயனர்கள் எக்காரணம் கொண்டும் டெலிட் செய்யவே முடியாது. இதுதான் மேட்டர்!
தொலைத்தொடர்பு அமைச்சகம் நவம்பர் 28-ஆம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்தது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, இரும்புக்கரம் கொண்ட நடவடிக்கை எனச் சொல்லலாம்.
ஆப்பிள், சாம்சங், விவோ, சியோமி போன்ற முன்னணி நிறுவனங்கள் கவனிக்கணும். அவங்களுக்கு 90 நாட்கள் மட்டும்தான் அவகாசம் கொடுத்திருக்காங்க.
அந்தக் கட்டாய செயலியின் பெயர் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi). ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஃபோன்களுக்குக் கூட அப்டேட் மூலம் அனுப்பச் சொல்லியிருக்காங்க.
இந்த அவசரம் எதற்காக? சைபர் திருட்டு, மோசடிகள் ரொம்ப அதிகமாயிடுச்சு. குறிப்பா, போலியான ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்களை வச்சு நடக்கும் கிரிமினல் வேலைகளைத் தடுக்கத்தான்.
இந்த ஐ.எம்.இ.ஐ (IMEI) நம்பர் ஒவ்வொரு ஃபோனுக்கும் ரொம்ப முக்கியம். அதுதான் அதன் தனிப்பட்ட ஐடி. போலியான எண்களை முடக்குவதுதான் மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கம்.
இந்தச் செயலி மூலம் திருட்டுப் போன ஃபோனைக் கண்டுபிடித்து முடக்கலாம். அதேபோல, சந்தேகமான அழைப்புகள் பற்றியும் பொதுமக்கள் புகாரளிக்க முடியும்.
இதன் பலன் இப்போதே தெரியுது. இந்த ஆப் ஏற்கனவே 50 லட்சத்துக்கும் மேல் டவுன்லோட் ஆகியிருக்கு. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான திருட்டுப் போன ஃபோன்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 30 மில்லியனுக்கும் அதிகமான மோசடி தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சைபர் பாதுகாப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.
ஆனாலும், ஆப்பிள் போன்ற சில கம்பெனிகள் எதிர்ப்பு காட்ட வாய்ப்பு இருக்கு. ஏன்னா, ஃபோன் விற்கும் முன்னாடி கவர்மென்ட் ஆப்பை இன்ஸ்டால் செய்யுறது அவங்க பாலிசிக்கு எதிராம்.
ஆனாலும், கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது, மத்திய அரசின் இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. இது உறுதி.