மெகா வேலைவாய்ப்பு..! அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மொத்தம் 30,000 பணியிடங்கள் ..!

Indian postal department
India post
Published on

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புக்காக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2026 ஜனவரி மாதம் 15ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.இதில் மொத்தம் 30,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GDS) அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவிக் கிளை போஸ்ட் மாஸ்ர் (ABPM), அஞ்சல் பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் தேர்ச்சி அவசியம்.அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்ளுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம்:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

  • சாதிச் சான்றிதழ்,

  • கல்விச் சான்றிதழ்கள்,

  • புகைப்படம்,

  • கையெழுத்து,

  • மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ. 100.

முக்கிய நாட்கள்: 2026 ஜனவரி மாதம் 15ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த ஆட்சேர்ப்பிற்குத் தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit List) தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

இதையும் படியுங்கள்:
2025 REWIND: அம்பானியா? அதானியா? 2025-ன் டாப் 10 இந்திய கோடீஸ்வரர்கள்!
Indian postal department

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com