
இந்தியாவில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் பொது போக்குவரத்தையே நம்பி வாழ்கின்றனர். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்லவே பேருந்து, ரயில் பயன்படுகிறது. அதுவும், பல மக்களுக்கு ரயில் என்பது தான் மிக சௌகரியமாக இருக்கும். விலையிலும் சரி, பயணம் செய்ய வசதியாகவும் இருக்கும். அப்படி இருக்கையில், ரயிலில் இந்த பொருளை எடுத்து செல்வதற்கு தடை என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் வலையமைப்பை கொண்டுள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை ரயில்வே வகுத்துள்ளது. இதில் சில பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ரயிலில் அடுப்புகள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், அமிலம் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ரயில்வே விதிகளின்படி, ஹைட்ரோகுளோரிக் அமிலம், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், அனைத்து வகையான வைக்கோல், இலைகள் அல்லது கழிவு காகிதம், எண்ணெய், கிரீஸ் போன்ற ஆபத்தான திரவங்களை ரயிலில் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு பயணியும் செல்லப்பிராணிகளை தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பினால், அவர்களுக்கென சிறப்பு விதிகள் உள்ளன. குறிப்பாக ஏசி முதல் வகுப்பு டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு. குதிரைகள் அல்லது ஆடுகள் போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளை எடுத்துச் செல்ல சிறப்பு அனுமதி உள்ளது.
விதிகளின்படி, ரயிலில் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது; இருப்பினும், அவசர மருத்துவ சூழ்நிலைகளில், குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலிண்டர்களை அனுமதிக்கலாம். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
ஆனால், இந்தப் பட்டியலில் மற்றொரு முக்கியமான பொருள் உள்ளது. அது என்னவென்று தெரியுமா? அது தேங்காய் தான். தினசரி நாம் வாழ்க்கையில் உணவுக்கான பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் தேங்காய். இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணி ரயிலில் உலர்ந்த தேங்காயுடன் பயணம் செய்வது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. உலர்ந்த தேங்காயின் வெளிப்புற பகுதி எரியக்கூடியது என்பதால், இது தீவிர அபாயத்தை ஏற்படுத்தும். அப்படி இந்த விதியை மீறி தேங்காயை கொண்டு சென்றால், ரூ. 1,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டு ஆண்டு சிறை வரையிலான தண்டனைகளை சந்திக்க நேரிடும். எனவே, ரயிலில் பயணம் செய்யும்போது இந்த விதிகளை பின்பற்றுவது அவசியம்.