அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
- இது குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பு தெரிவித்ததாவது:
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3% - லிருந்து 3.25% க்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 80.46 ஆக குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது