754 ஓட்டுநர்களுக்கு அபராதம்: இந்திய போக்குவரத்து துறை!

போக்குவரத்து
போக்குவரத்து
Published on

இந்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலின் மூலம் நாடு முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளின் கடுமையான போக்குவரத்து நெரிசலும், காற்று, ஒலி மாசும் ஏற்பட்டு வருகிறது. மறுபுறம் இந்த வாகனங்களை இயக்கும் பலரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததால் உயிரிழப்பும் நிகழ்கிறது.

அதாவது தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவலின்படி கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 3,97,530 பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு ரூ.9,100 அபராதம் வசூலிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்திருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 28,286 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

போக்குவரத்து
போக்குவரத்து

இவ்வாறு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும் பலரும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டுத் தான் வருகிறார்கள். இதில் அரசு பஸ் ஓட்டுநர்களும் அடங்குவர். கடந்த 10 ஆண்டுகளில் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு ரூ.9,100 அபராதம் வசூலிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்திருக்கிறது.

இதற்கு போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதது, போன்றவை முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே சாலை விபத்துக்களைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகச் சமீபத்தில் சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com