தாய்லாந்தில் சைபர் மோசடி கும்பளிடமிருந்து சுமார் 540 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் லட்சக் கணக்கில் பணம் சம்பாரிக்கலாம் என்ற ஆசையில், அதுபோன்ற விளம்பரம் ஏதாவது வந்தால், உடனே அங்கு சென்றுவிட முடிவெடுத்துவிடுவது வழக்கமாகி வருகிறது. அதேபோல், பலர் அதனை நம்பி அடிமைகளாக வேலைப் பார்த்து வருவதும் வழக்கமாகத்தான் நடந்து வருகிறது.
இப்படித்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விளம்பரத்தை நம்பி லாவோஸ் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 47 இந்தியர்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் அடிமைகளாக வேலைப்பார்த்து தவித்து வந்துள்ளனர். அவர்களுக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்தனர். தூங்கவிடாமல், ஓய்வும் தராமல், ஒரு அடிமைகள் போல் வேலை வாங்கிக்கொண்டிருந்தது அந்த கும்பல். அளவுக்கடந்த துன்புறுத்தலை அனுபவித்து வந்த அவர்கள், இந்திய அரசால் பத்திரமாக மீட்கப்பட்டார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
அதேபோல்தான் தற்போதும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்திருக்கிறது.
அதாவது மியான்மர் தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றியிருக்கின்றனர். அப்படி தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை, மேலும் 270 இந்தியர்கள், தாய்லாந்தின் மே சோட்டில் இருந்து இரண்டாவது விமானத்தில் திரும்புகிறார்கள்.
இதில் பல பேர் போலி வேலை வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு, தாய்லாந்து-மியான்மர் எல்லையில் பல வாரங்களாக சிக்கித் தவிக்கின்றனர்.
தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் போலி வேலைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய முழு மூச்சாக இறங்கியுள்ளது. இதனால், அந்த இரண்டு நாட்டு அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் இறுதியில் இந்த இரு நாடுகளின் எல்லையிலிருந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 7 ஆயிரம் பேர் சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
கடந்த சில நாட்களாகவே தாய்லாந்து மற்றும் மியான்மர் இணையவழி மோசடிக்காரர்களை கண்டுபிடிக்க பல வழிகளில் முயற்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது.