அமெரிக்க H1B Visa வில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!

அமெரிக்க H1B Visa வில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!

அமெரிக்க அரசு கொடுத்துள்ள ஒவ்வொரு 4 H1B Visa வில் 3 விசாக்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர். உலகளவில் அதிகப் படியானோர் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற தேர்வு செய்யும் முக்கியமான விசா H1B Visa.

அமெரிக்க அரசின் 2022 ஆம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு ஒப்புதல் அளித்த H1B Visa விண்ணப்பத்தில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப் படியான இந்தியர்களின் விண்ணப்பம் ஒப்புதல் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது இந்தியா.

2022 ஆம் நிதியாண்டில் மட்டும் அமெரிக்க அரசு சுமார் 4.4 லட்சம் H1B Visa விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இதில் சுமார் 3.2 லட்சம் விசா விண்ணப்பங்கள் இந்தியர்களின் விண்ணப்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மொத்த ஹெச்1பி விசா விண்ணப்பத்தில் இந்தியர்கள் சுமார் 72.6 சதவீத விசாக்களை பெற்றுள்ளனர்.

பொதுவாக H1B Visa விசா காலம் 6 வருடம், இந்த நிலையில் உரிய நபரின் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப் பட்டாலோ, அல்லது விண்ணப்பதாரர் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து முயற்சி செய்தாலோ H1B Visa நீட்டிக்க விண்ணப்பம் அளிக்கப்படும். இதில் புதிய விண்ணப்ப ஒப்புதல்களும், விசா நீட்டிப்பு விண்ணப்பங்களும் அடக்கம்.

இந்தியாவை தொடர்ந்து சீனா சுமார் 55,038 H1B Visa விண்ணப்பங்களை பெற்றுள்ளது, இது மொத்த எண்ணிக்கையில் 12.5 சதவீதமாகும். 3வது இடத்தில் கனடா உள்ளது, 2022 ஆம் நிதியாண்டில் அண்டை நாடான கனடாவுக்கு அமெரிக்கா 4,235 H1B Visa விண்ணப்ப ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு உள்ளது, இது மொத்த எண்ணிக்கையில் 1 சதவீதமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com