'ஆஸ்கர் விருதுகள்' 2023 ஆம் ஆண்டு தேர்வுக் குழுவில் இந்தியர்கள்!

'ஆஸ்கர் விருதுகள்' 2023 ஆம் ஆண்டு தேர்வுக் குழுவில் இந்தியர்கள்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

'ஆஸ்கர் விருதுகள்' 2023 ஆம் ஆண்டு தேர்வுக் குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

புதுடெல்லி, ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப் படுவார்கள். அந்த வகையில் 2023 - ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023ம் ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக் குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக் குழுவுக்கு இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

A. R. Rahman
A. R. Rahman

ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் ஆஸ்கர் குழுவுக்கு உறுப்பினர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் ஆஸ்கர் குழு உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத் தக்கது.

தனது தனித்துவமான படைப்பாற்றலின் மூலம் இந்திய சினிமாவில் தனெக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் மணிரத்தினம். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்கர் விருதுகளை குவித்து சாதனை படைத்த இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com