126 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் தினசரி கோவிட் எண்ணிக்கை 800 ஐத் தாண்டியுள்ளது!

126 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் தினசரி கோவிட் எண்ணிக்கை 800 ஐத் தாண்டியுள்ளது!
Published on

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமையன்று 126 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு நாள் COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 800 ஐத் தாண்டியது, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது.

843 புதிய நோய்த்தொற்றுகளுடன், நாட்டின் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,94,349) அதிகரித்துள்ளது. நான்கு இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்தது, இந்த தரவு காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது.

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது, கேரளாவில் இரண்டு கேஸ்கள் கடுமையான மருத்துவ முயற்சிகளின் பின் சரி செய்யப்பட்டன.

5,839 ஆக இருந்த மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில், ஆக்டிவ்வாக அதாவது செயலில் உள்ள வழக்குகள் இப்போது மொத்த நோய்த்தொற்றுகளில் 0.01 சதவிகிதம் ஆகும்.எனவே தேசிய COVID-19 மீட்பு விகிதம் 98.80 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது.

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,58,161 ஆக உயர்ந்துள்ளது மற்றும் வழக்கு இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

அமைச்சகத்தின் இணையதளக் குறிப்பின்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 220.64 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com