நெசவாளர்கள் வயிற்றில் பால் வார்க்கும் இந்தியாவின் முதல் பட்டுப் பூங்கா!

நெசவாளர்கள் வயிற்றில் பால் வார்க்கும் இந்தியாவின் முதல் பட்டுப் பூங்கா!

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் 120 கோடி ரூபாய் செலவில் காஞ்சி பட்டு பூங்கா அமைக்க முந்தைய திமுக ஆட்சியிலேயே அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டிருந்தன. 2010 ஆம் ஆண்டில் கலைஞர் முதல்வராக இருந்த போதே அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் இருந்தே பூங்கா பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பூங்காவில் கைத்தறி நெசவு, பருத்தி சாயமிடுதல், எம்பிராய்டிங், கார்மெண்டிங் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 82 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது 10 க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்கூடங்களில் பணிகள் தொடங்கப்பட்டு 1000 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்கள் அதிக அளவில் நெசவுத் தொழில் செய்ய ஆர்வம் காட்டி பட்டுப் பூங்காவுக்கு படையெடுத்திருக்கின்றனர். தினக்கூலி, மாதக்கூலியாக சம்பளம் வழங்கப்படுகிறது. நெசவாளர்களுக்குத் தினமும் மதிய உணவும் பணியாளர்களுக்கு இலவசப் பேருந்து வசதியும் செய்து தரப்பட்டிருக்கிறது.

இந்த திட்டம் முழுமையாக நிறைவடையும் போது கிட்டத்தட்ட 18,000 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதன் மூலமாகப் வேலை வாய்ப்பைப் பெற முடியும் என்கிறது அரசு.

இந்தியாவிலேயே முதன் முறையாக காஞ்சிபுரத்தில் மட்டுமே இப்படி கைத்தற்பட்டுச் சேலைகளுக்கு எனத் தனியாக ஒரு பூங்கா தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைத்தறிப் பட்டுப் பூங்காவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தங்கு தடையில்லாமல் பட்டு உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு வேலை செய்பவர்களுக்கு குறைந்த பட்சமாக தினக்கூலி ஊதியமாக 450 ரூபாய் கிடைக்கிறது. பணியாளர்களின் திறனைப் பொறுத்து இந்த ஊதியம் அதிகரிக்கும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com