உலக அரங்கில் இந்தியாவின் தங்க கஜானா : மிரண்டு பார்க்கும் வல்லரசுகள்..!!

India Gate overflowing with gold, leaders amazed.
India's Golden Ascension: Over $100 Billion in Gold
Published on

கடந்த சில வருடங்களாக இல்லாத அளவுக்குத் தங்கத்தின் விலை சமீபத்தில் ஏன் இப்படி உச்சத்தைத் தொடுகிறது? 

நம்ம எல்லோருடைய மனசிலும் இந்தக் கேள்வி தான் ஓடிட்டே இருக்கும்...காரணம் இதுதான்: நாம் வாங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்வுக்குப் பின்னணியில், உலக நாடுகள் ஆடும் ஒரு பெரிய பொருளாதார ராஜதந்திரம் இருக்கு!

அந்த ராஜதந்திரத்தின் மையப் புள்ளியைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

அதாவது, நம்ம கஜானாவில் தங்கத்தோட மதிப்பு இப்போ 100 பில்லியன் டாலரை (சுமார் ₹8,30,000 கோடி!) தாண்டி, ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கு.

இது ஒரு சாதாரணச் செய்தி இல்லை; உலகப் பொருளாதாரப் போர்க்களத்தில் இந்தியா ஒரு புதிய இடத்தைப் பிடித்திருப்பதற்கான அறிகுறி!

ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ரிசர்வ் (Forex Reserve)-னா என்ன? அது ஒரு நாட்டோட கௌரவம், வலிமை! அதுல, தங்கத்துக்கான இடம் இப்போ ராக்கெட் வேகத்துல ஏறியிருக்கு.

இந்தோனேசியா, தென் கொரியா போன்ற ஆசியப் பொருளாதார நாடுகள் தங்கம் சேர்க்கத் தயங்கும் வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உலக நாடுகளை வியக்க வைக்கும் ஒரு ராஜதந்திரத்தை அரங்கேற்றியிருக்கு!

வல்லரசுகளின் ரகசியம்: தங்கம் சேர்ப்பது ஏன்?

உலக நாடுகள் ஏன் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன? டாலர் மீதான நம்பிக்கை குறைய குறைய, எல்லா நாடுகளும் "சேஃப் ஹெவன்" (Safe Haven) எனப்படும் பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகின்றன.

அந்த முதலீடுதான் தங்கம். தங்கத்தை யாரும் அச்சடிக்க முடியாது, அதன் மதிப்பு யாராலும் திடீரென மாற்றப்பட முடியாதது.

உலக மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதற்கான காரணங்கள்:

  1. டாலர் மீதான பயம்: அமெரிக்க டாலர் எப்போது வேண்டுமானாலும் பலவீனமடையலாம் அல்லது புவிசார் அரசியல் சண்டைகளால் (Geopolitical Tensions) அதன் மதிப்பு குறையலாம் என்ற அச்சம்.

  2. கடன் அபாயம்: பல நாடுகளின் அரசு கடன் (Sovereign Debt) அபாயங்கள் அதிகரித்து வரும் சூழலில், தங்கம் மட்டுமே எந்தக் கடன் சுமையையும் சாராமல் இருக்கும் ஒரே சொத்து.

  3. போர்ட்ஃபோலியோவை சமன் செய்தல்: எல்லா நாணயங்களையும் ஒரே கூடையில வைக்காமல், தங்கத்தை வச்சு தங்களுடைய அன்னியச் செலாவணி கையிருப்பை (Foreign Exchange Reserves) சமன் செய்துகொள்கிறார்கள்.

இந்தியாவின் தங்க ராஜதந்திரம்: ஒரு நுட்பமான நகர்வு

1. ஆர்வம் குறைஞ்சாலும், மதிப்பில் சறுக்கல் இல்லை!

இந்த வருடம் (2025) நம்ம ரிசர்வ் வங்கியின் தங்க கொள்முதல் வேகம் குறைந்தது உண்மைதான்.

போன வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 50 டன் தங்கம் வாங்கியிருந்தோம், ஆனால் இந்த வருடம் வெறும் 4 டன் மட்டும்தான் சேர்த்தோம்.

அப்போ எப்படி மதிப்பு ஏறியது?

இங்கதான் உலகமே நம்ம பக்கம் திரும்புது! நாம் குறைவாக வாங்கினாலும், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஒரே வருஷத்தில் 65% உயர்ந்துள்ளதால், ஏற்கனவே நாம் வைத்திருந்த தங்கத்தின் மதிப்பே விண்ணை முட்டியது.

இது நாம் சரியான நேரத்தில் தங்கத்தை வாங்கிக் குவித்ததற்கான சான்று. குறைந்த முதலீட்டில், மிக அதிக லாபத்தைப் பெற்றது போல இது!

2. வலுவான அடித்தளம்:

நம்ம ரிசர்வ் வங்கியோட மொத்த சேமிப்பில், தங்கத்தோட பங்கு இப்போ 14.7% ஆக உயர்ந்திருக்கு.

இது 1996-97-க்கு அப்புறம் நாம் காணும் அதிகபட்ச உயர்வு. இந்த உயர்ச்சி, உலக நாணயங்கள் பலவீனமடையும்போது, இந்திய ரூபாய்க்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.

3. 880 டன் கையிருப்பு:

அக்டோபர் 10 நிலவரப்படி, நம்மிடம் சுமார் 880 டன் தங்கம் கையிருப்பு இருக்கு. இந்தக் கையிருப்பு, நம்முடைய நாட்டின் நிலைத்தன்மையையும், சர்வதேச வணிகத்தில் ஏற்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறனையும் உலக நாடுகளுக்குப் பறைசாற்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com