சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்தமான இடங்களில் முதலிடம் பிடித்த தாஜ்மகால்!

சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்தமான இடங்களில் முதலிடம் பிடித்த தாஜ்மகால்!
Published on

ந்திய சாலைகளில் வெள்ளைக்காரர்கள் நடந்து போவதை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருக்கலாம். கொரானா தொற்றுக்குப் பின்னர் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவது கணிசமாக குறைந்திருக்கிறது. தாஜ்மகால் மட்டும் இல்லாவிட்டால் யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்!

உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் விருப்பமான இடமாக, நம்பர் ஒன் இடத்தை தாஜ்மகால் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மத்திய தொல்லியல் துறை சமீபத்தில் எடுத்த ஆய்வறிக்கையில் பயணிகளின் வருகையை பொறுத்தும் இந்தியாவில் உள்ள புராதானச் சின்னங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள். அதில் தாஜ்மகால்தான் நம்பர் ஒன்!

உள்நாட்டு பயணிகளுக்கு பிடித்தமான டாப் 5 இடத்தில் தாஜ்மகால், ரெட் போர்ட். கோனார்க், குதுப் மினார், ஆக்ரா போர்ட் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றில் கோனார்க் தவிர மற்றவையெல்லாம் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்திருக்கிறது.  உள்நாட்டு பயணிகளின் வரத்தை பொறுத்தவரை, 2019 ஆண்டை ஒப்பிடும்போது 2023ல் 33 சதவீதம் குறைந்திருக்கிறது.

வெளிநாட்டு பயணிகளுக்கு பிடித்தமான டாப் 5 இடத்தில் தாஜ்மகால், ஆக்ரா போர்ட். குதுப்மினார், ஹிமாயூன் கல்லறை, பதேபூர் சிக்கிரி உள்ளிட்டவை இம் பிடித்துள்ளன. இவை அனைத்தும் டெல்லியை சுற்றியுள்ள இடங்களில் இருப்பவை. பயணிகளின் வரத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த 2019 ஆண்டுடன் ஒப்பிடும்போது 80 சதவீதம் குறைந்திருக்கின்றன.

டெல்லியைச் சேர்ந்த வரலாற்றுத்தலங்களுக்கு வருபவர்கள்தான் அதிகம். இந்தியா முழுவதும ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் இருந்தாலும் டெல்லியில் இருப்பவை தனிக்கவனம் பெற்றிருக்கின்றன. கொரானாவுக்கு பின்னர் சுற்றுலாத்துறை வளர்ச்சி மெல்ல முன்னேற்றம் கண்டாலும், கொரானாவுக்கு முந்தைய வளர்ச்சியை எட்டுவதற்கு இன்னும் சில காலமாகும் என்கிறார்கள்.

சுற்றுலாத்துறையில் நீடிக்கும் சுணக்கத்திற்கு வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வர தயாராக இல்லை என்பதுதான் காரணம். கொரானா காலத்தால் பெரிய பின்னடைவை சந்தித்தாலும், அதற்கு பிந்தைய காலத்திலும் பெரிய அளவில் வளர்ச்சி பெற முடியவில்லை. போக்குவரத்து வசதியில்லாத இடங்களுக்கு பயணம் செய்வதற்கு வெளிநாட்டு பயணிகளும் விரும்புவதில்லை. குறைந்தபட்சம் மருததுவமனை, தங்குமிடம் கொண்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல விரும்புகிறார்கள்.

சுற்றுலாத்தலங்களுக்கு வருவதை விட சைக்கிள், பைக் போன்றவற்றில் ஊர் சுற்றுவது, மலையேறுவது உள்ளிட்ட விஷயங்களில் மக்களுக்கு ஈடுபாடு வந்திருக்கிறது. நல்ல பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் உடல்நலனை பேணுவதற்கும் சரியாக இருக்கவேண்டும் என்பதால் புதிய வழிகளை நாடுகிறார்கள்.  கோயில்களுக்குச் செல்வதை விட பண்ணை வீடுகள், தோட்டங்களில் நேரத்தை செலவழிக்க நினைக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத்தலங்களில் கட்டமைப்பு வசதி இல்லை. ஏதேனும் ஒரு கோயிலாக இருந்தால் அதை மட்டுமே பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணித்து செல்ல வேண்டியிருக்கிறது. பிற இடங்களில் பேக்கேஜ் டூர் வசதி இருக்கிறது. உதாரணத்திற்கு பாரீஸிற்கு சென்றால் ஈபிள் டவர் மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள இடங்களில் ஷாப்பிங் செய்யலாம். போட்டிங் போகலாம். இந்தியாவில் கொனராக் கோயிலுக்கு சென்றால் அதை மட்டுமே பார்த்துவிட்டு வரவேண்டியிருக்கும்.

கொரான தொற்றுக்கு பின்னர் சுற்றுலாத்துறை தயாராகிவிட்டதாக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை. மேற்கத்திய நாடுகளில் இன்னும் பலர், இந்தியாவில் கொரானா தாக்கம் இன்னும் நீடிப்பதாகவே நினைத்துக் கொள்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகளாக சகஜ நிலை நீடித்தாலும் வெளிநாட்டு பயணிகள் மத்தியில் தயக்கம் தெரிகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com