தேசிய மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்கள் கட்டாயம்! தகவல் ஒளிப்பரப்புத்துறை அறிக்கை!

தேசிய மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்கள் கட்டாயம்! தகவல்  ஒளிப்பரப்புத்துறை அறிக்கை!
Published on

தேசிய நலன் மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்களை தினமும் 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் நலன், சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலன், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பு ,தேசிய ஒருங்கிணைப்பு போன்ற 8 கருப்பொருள்கள் கொண்ட தலைப்புகளின் கீழ் தினமும் தகவல்கள் ஒளிபரப்ப வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது நலன் மற்றும் தேசிய நலன் தொடர்பான தகவல்கள் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும். கல்வி மற்றும் எழுத்தறிவு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு , உடல்நலம் மற்றும் குடும்ப நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளின் கீழ் தினமும் தகவல்கள் ஒளிபரப்ப வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டி.வி சேனல்களை அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்- 2022 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன் கீழ் டி.வி சேனல்கள் தேசிய மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்கள் ஒளிபரப்புவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் நவம்பர் 9 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்ற சேனல்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com