டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இன்போசிஸின் மோஹித் ஜோஷி!

டெக் மஹிந்திராவின்  தலைமை நிர்வாக அதிகாரியாக இன்போசிஸின்  மோஹித் ஜோஷி!
Published on

இந்தியாவின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் டெக் மஹிந்திராவின் புதிய நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திராவின் தற்போதைய சிஇஓ மற்றும் எம்டி ஆக பணியாற்றி வரும் சிபி குர்னானி இந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார். இவருடைய இடத்திற்கு பல மாதங்களாக புதிய நபரை தேடி வந்த டெக் மஹிந்திரா நிர்வாகம் மோஹித் ஜோஷியை நியமித்துள்ளது.

மோஹித் ஜோஷி டிசம்பர் 20, 2023 முதல் டிசம்பர் 19, 2028 வரை 5 ஆண்டுகளுக்கு டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று டெக் மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோஹித் ஜோஷி வெளியேற்றம் குறித்து இன்போசிஸ் தனது அறிக்கையில், அவருடைய சேவைகளுக்காகவும், நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் இயக்குநர்கள் குழு பாராட்டுகளை பதிவு செய்கிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

மோஹித் ஜோஷி இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவான நிதியியல் சேவை பிரிவின் தலைவர். இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் மோஹித் ஜோஷி சுமார் 22 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து தற்போது 5வது இடத்தில் இருக்கும் டெக் மஹிந்திராவின் உச்ச பதிவியில் அமர்கிறார். இவருடைய வெளியேற்றம் கட்டாயம் பெரும் தாக்கத்தை இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்படுத்தும் என்கிறர்கள் பொருளாதார வல்லுநர்கள்.

கடந்த 6 மாதத்தில் மோஹித் ஜோஷி இன்போசிஸ் கம்பனியை விட்டு வெளியேறிய 2வது உயர் அதிகாரியாகும். 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எஸ் ரவி குமார் இன்போசிஸ்-ல் சுமார் 20 வருட பணியாற்றிய பின்பு வெளியேறி தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com