5 ரூபாய் நாணயம் போட்டால் 20 லிட்டர் குடிநீர்; காஞ்சிபுரத்தில் அசத்தல்!

தானியங்கி இயந்திரம்
தானியங்கி இயந்திரம்
Published on

காஞ்சிபுரத்திலுள்ள களக்காட்டூர் கிராமத்தில் , மாநில நிதி குழு மானியத்தின் உதவியுடன் 5 ரூபாய் நாணயம் போட்டால் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வரும் வகையிலான தானியங்கி இயந்திரம் பொருத்தப் பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

எங்கள் கிராமத்தில் 7.96 லட்சம் ரூபாய் செலவில் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த இயந்திரத்தில்  5 ரூபாய் நாணயம் போட்டால், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரும். பின்னர் தண்ணீர் வருவது தானாக நின்று விடும். அதனால் தண்ணீரை யாரும் வீணாக்க முடியாது.

கிராமத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போது வெளி மக்கள் பிடித்து செல்ல அனுமதி கிடையாது. மற்றபடி யார் வேண்டுமானாலும் தண்ணீரை பயன் படுத்தி கொள்ளலாம்.

கடந்த ஆண்டு மழையின் போது குடிநீர் குழாய்கள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டபோது இந்த தண்ணீர்தான் எங்கள் தேவைக்கு கைகொடுத்தது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பராமரிக்க ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

-இவ்வாறு அவர்கள் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com