தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆண்டு தோறும் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் வரும் 13-ந் தேதி தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் உள்பட தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்து வருகின்றனர் . தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கி வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான வாகன சோதனை ஒத்தக்குதிரை அருகே தனியார் கல்லூரி யில் நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்துதுறை சார்பில். தனியார் பள்ளி வாகனங்களுக்கான சோதனை நடைபெற்றது – இதில் 30 பள்ளிகளை சேர்ந்த 238 வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் பகுதிகளில் செயல்படும், 30 தனியார் பள்ளிகளில் இயக்கபட்டு வரும் வாகனங்கள் குறித்த ஆய்வு, தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மேலும், 30 தனியார் பள்ளிகளில் இயக்கப்பட்டு வரும் 238 வாகனங்கள் ஆய்விற்க்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், பள்ளி வாகனங்களில் அரசு விதிமுறை படி வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்படுதல் போன்றவற்றை ஆராய்ந்தனர். மேலும், முதலுதவி உபகரணங்கள்
உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்பதை, கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்சினி, துணை ஆட்சியர் காயத்திரி, வட்டார போக்குவரத்துதுறை அலுவலர் (பொறுப்பு) சித்ரா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் கோபிசெட்டிபாளையம், சத்தி மற்றும் பவானி பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.