மன அழுத்தத்திற்கு காரணமான இன்ஸ்டாகிராம் : அமெரிக்க மாகாணங்களில் வழக்கு!

மன அழுத்தத்திற்கு காரணமான இன்ஸ்டாகிராம் : அமெரிக்க மாகாணங்களில் வழக்கு!

ன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் மன அழுத்தம் ஏற்படுவதாக அமெரிக்காவின் 33 மாகாணங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி சமூக ஊடக நிறுவனமாக விளங்குவது மெட்டா. இது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என்ற பல்வேறு கிளை நிறுவனங்களை இயக்கி வருகிறது. மெட்டா நிறுவனம் இயக்கி வரும் சமூக ஊடக செயலிகளை உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டி வரும நிறுவனமாக மெட்டா நிறுவனம் மாறி இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட 33 மாகாணங்களில் மெட்டா நிறுவனத்தின் உடைய கிளை நிறுவனமாக செயல்படும் இன்ஸ்டாகிராம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்பான ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில், மெட்டா நிறுவனம் முழுக்க முழுக்க லாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக செயலிகளை இயக்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

மேலும் இன்ஸ்டாகிராம் இளைஞர்களை, மாணவர்களை தவறாக வழி நடத்தி வருகிறது. இதன் மூலம் அவர்களுடைய நேரங்கள் சுரண்டப்படுகின்றன. அவர்கள் கல்வி பெற தடையாகவும் தற்போது மாறி வருகிறது. இது மட்டுமல்லாது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம், கற்றல் குறைவு, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் விதைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் நிறுவனம் முழுக்க முழுக்க வணிகப் பயன்பாடை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது. பயனாளர்களினுடைய உளவியல் ரீதியான பாதுகாப்பிற்கு அந்நிறுவனத்திடம் எவ்வித செயல் திட்டங்களும் இல்லை. எனவே இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கு வயது வரம்பை விதிக்க வேண்டும்.

பயன்பாட்டிற்கான கால வரையறையை நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இன்ஸ்டாகிராம் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com