பள்ளி மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எமிஸ் ஐடியைத் தவிர்க்க சி இ ஓ க்களுக்கு அறிவுறுத்தல்.

பள்ளி மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எமிஸ் ஐடியைத் தவிர்க்க சி இ ஓ க்களுக்கு அறிவுறுத்தல்.

ப்போது அனைத்துத் துறைகளிலும் ஒருவரைப் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய ஐடி கார்டு என்பது வெகு முக்கியமானதாகிறது. அந்த வகையில் பள்ளியில் சேரும் மாணவர்களின் தகவல்கள் அடங்கிய எமிஸ் எனப்படும் ஐடி கார்டு பற்றிய செய்திதான் இது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட எமிஸ் ஐடி உருவாவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிஇஓ அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் எமிஸ் ஐடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐடியின் அடிப்படையிலேயே மாணவர்கள் தொடர்பான அனைத்து தரவுகளும் சேகரிக்கப்படும். எனவே ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே எமிஸ் ஐடி பராமரிப்பது  அவசியமாகும். இதனிடையே ஒரே மாணவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட எமிஸ் ஐடி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஇஓ க்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சிஇஓ க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதல் முறையாக பள்ளியில் சேர்க்கப்படும் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே புதிய மாணவர் சேர்க்கை படிவம் எமிசில் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்த பின் மாணவர்க்கு எமிஸ் ஐடி உருவாக்கப்படும். யுகேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் மற்றொரு பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் ஏற்கனவே எமிஸ் ஐடி உள்ளதா என்பதை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்து பின்னரே புதிய ஐடி வழங்க வேண்டும். பள்ளியில் சேரும் அனைத்து மாணவருக்கும் மாணவர் பெயர் பெற்றோர் விபரம் மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றுடன் மாணவரின் எமிஸ் ஐடியை குறிப்பிட்டு சேர்க்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

இந்த சான்றிதழை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின்வரும் காலங்களில் மாணவர்களின் பெயர் பிறந்த தேதி ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் இருப்பின் பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். இதனை பயன்படுத்தி மட்டுமே மாற்றங்கள் மேற்கொள்ள இயலும். எனவே மாணவர் விவர படிவத்தில் உள்ள முறையில் விவரங்களை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி மாற்றம் செய்யும் மாணவரின் எமிஸ் ஐடி தெரியவில்லை எனில் பெற்றோர் தொலைபேசி எண் மாணவர் பிறந்தநாள் முன்னர் படித்த பள்ளியின் விபரம் ஆகியவற்றை உள்ளீடு செய்து அந்த மாணவரின் எமிஸ் ஐடியை கண்டறிய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர் களின் குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கான மாற்று சான்றிதழை இணைக்க வேண்டும். அச்சான்றிதழ் இல்லாத பட்சத்தில் ஆதார் அட்டை இருப்பிட சான்றிதழ் பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் இன்னும் பிற இருப்பின் அதனை இணைத்தல் வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

முறையான எமிஸ் ஐடி ஒவ்வொரு மாணவருக்கும் அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com