
அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் கோர்டன் இ மூர் சனிக்கிழமை ஹவாயில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இன்டெல் & கோர்டன் மற்றும் பெட்டி மூர் அறக்கட்டளை ஆகிய இரண்டும் அவரது மறைவை ஒப்புக்கொண்டன, இருப்பினும், அவர்கள் அவரது மறைவு பற்றிய மேலதிக விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
1960 களில் கணினி சிப் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியைப் பற்றிய மூரின் தொலைநோக்கு சிந்தனை உயர் தொழில்நுட்ப சகாப்தத்திற்கு களம் அமைத்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு அதன் பெயரைக் கொடுக்க உதவிய கலிஃபோர்னியா செமிகண்டக்டர் சிப் தயாரிப்பாளர், நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, மகத்தான அமெரிக்க இரயில் பாதை அல்லது எஃகுத் தொழில்களால் முன்னர் நடத்தப்பட்ட பரந்த தொழில்துறை ஆதிக்கத்தை அடைந்தது.
மூர் எப்போதுமே தன்னை ஒரு 'ஆக்ஸிடெண்ட்டல் தொழில்முனைவோர்'என்று அழைப்பது வழக்கம், ஏனெனில் அவருக்கு ஆசிரியராக வேண்டுமென்று விருப்பமிருந்தது. ஆனால், அது சாத்தியப்படவே இல்லை. வளரும் மைக்ரோசிப் துறையில் அவரது அசல் USD 500 முதலீடானது பின்னாட்களில் எலக்ட்ரானிக்ஸ் உலகின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக மாற உதவியது, அவர் ஒரு பில்லியனர் ஆனார்.
மேலும், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு லேப்டாப் கணினிகளை அணுகும்படி செய்த பெருமை அவருக்கு உண்டு, அத்துடன் டோஸ்டர் ஓவன்கள், குளியலறை ஸ்கேல்கள் மற்றும் பொம்மை தீயணைப்பு வண்டிகள் முதல் தொலைபேசிகள், ஆட்டோமொபைல்கள் மற்றும் விமானம் வரை அனைத்திலும் நுண்செயலிகளை வைப்பதன் மூலமும் அவர் பெருமை பெற்றார் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இவை தவிர மூர், அவரது மனைவி பெட்டி மூருடன் இணைந்து நன்கொடைகளுக்கான மகத்தான பங்களிப்பையும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் இணைந்து 2001 இல் கோர்டன் மற்றும் பெட்டி மூர் அறக்கட்டளையை நிறுவினர். அதன் மூலமாக செயல்பாட்டில் இருக்கும் 175 மில்லியன் இன்டெல் பங்குகளை நன்கொடையாக வழங்கினர். அவர்கள் 2001 ஆம் ஆண்டில் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு 600மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கி மிகப்பெரிய அறச்செயலை செய்தனர்.
மூரும் அவரது நீண்டகால சக ஊழியர் ராபர்ட் நொய்ஸும் ஜூலை 1968 இல் இன்டெல்லை நிறுவினர்.
1975 இல் இண்டெல் பிரஸிடெண்ட்டாகப் பதவியேற்பதற்கு முன்பு, நிர்வாக துணைத் தலைவராக இருந்தார். பின்னர் 1979 இல் வாரியத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார், 1987 ஆம் ஆண்டில் அவர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார், ஆனால் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் என இன்டெல் செய்திகள் தெரிவித்துள்ளன.