ககன்யான் திட்டம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Gaganyaan
Gaganyaan ISRO
Published on

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்..

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவேண்டும் என்பது இந்தியாவின் கனவு திட்டம். உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்திருக்கின்றன. இந்த பட்டியலில் இந்தியாவும் இணைய தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

1975 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகிறது. உலகின் பிற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களைக் காட்டிலும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைசிறந்த நிறுவனம் என்பதற்கு பல்வேறு சான்றுகளை உதாரணமாக ஆக்கியிருக்கிறது.

குறிப்பாக மற்ற வல்லரசு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட பொருளாதார பிரச்சினையில் சிக்கி தவிக்க, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் குறைந்த செலவில் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதோடு மட்டுமல்லாமல் பிற நாட்டு செயற்கைக்கோள்களை வருமான ரீதியாகவும் அனுப்பி வருமானம் ஈட்டி வருகிறது. ‌

தொடர்ச்சியாக தடையின்றி விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதலங்களை உருவாக்கியுள்ளது. மேலும் தற்போது சந்திரனுக்கு செயற்கைக்கோளை அனுப்பி இந்திய விண்வெளி துறை உலக நாடுகளுக்கு வியப்பை உண்டாக்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறது இஸ்ரோ.

இஸ்ரோ 2025 ஆம் ஆண்டு மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ககன்யான் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மூன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் நீர் வழியான கடலில் தரை இறங்கும் வழியில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

ககன்யான் மிஷினை TV-D1 என்ற ராக்கெட் சுமந்து செல்கிறது. இந்த ராக்கெட் இரண்டு ராக்கெட்டாக இருக்கும். செயற்கைக்கோளை சுமந்து சொல்லும் ராக்கெட்டின் முழு பகுதியும் ஒரே ராக்கெட்டாக இருக்கும். ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் மற்ற நாட்டுக்களின் எல்லைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அவை விண்வெளியிலேயே வெடிக்க செய்யப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது ககன்யான் மனிதர்களைக் கொண்டு தனது பயணத்தை மேற்கொள்ள இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக TV-D1 ராக்கெட் இரண்டு பிரிவுகளாக இரண்டு ராக்கெட்டுகளை கொண்டு இயங்கும்.

TV -D1 ராக்கெட் கீழ்ப்புறத்தில் இருக்கும் பகுதி சாதாரண ராக்கெட் ஆகும். மேல் புறத்தில் மனிதர்களை சுமந்து செல்லும் களத்துடன் இருக்கும் சிறப்பு ராக்கெட் இருக்கும். விண்வெளிக்குச் சென்றவுடன் ககன்யான் களம் சிறப்பு ராக்கெட்டும் தனியாகப் பிரிந்து பணிகளை மேற்கொள்ளும். கீழ்ப்புறத்தில் இருந்த சாதாரண ராக்கெட் பிரிந்து தனியாக சொல்லும். தற்போது 4000 கிலோ மீட்டர் உயரத்தில் ககன்யான் களத்தை சோதனை செய்ய இஸ்ரோ முடிவு செய்திருக்கிறது.

இதற்காக மகேந்திரகிரி ஆய்வு மையத்தில் ஐந்து ஆண்டுகளாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் ககன்யான் தற்போது சோதனை முறையாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் மனிதர்கள் பயன்படுத்தும் இடத்திற்கு க்ரூப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் மூன்று பேர் பயணிக்க முடியும். சோதனை முயற்சியின் போது 9 நிமிடத்திற்குள் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை அடைந்து உடனடியாக இஸ்ரோ மையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் தரையிறங்கும் வகையில் பயணத் திட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ககன்யான் கடல் பகுதியை அடைந்த உடனே இந்திய கடற்படைக்கு இஸ்ரோவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டு, அடுத்த சில வினாடிகளில் இந்தியாவினுடைய கப்பல் படையினர் ககன்யானில் உள்ள மனிதர்களை மீட்பார்கள். மேலும் இந்திய விமானப் படையும் இதற்கான பாதுகாப்பை முன்னெடுக்கும். இஸ்ரோ மேற்கொள்ள இருக்கும் சோதனை ஓட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் 2025 ஆம் ஆண்டு மூன்று இந்தியர்கள் விண்வெளியில் ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com