ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
Published on

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக லிண்டா யாக்கரினோவை நியமித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவன் எலான் மஸ்க்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரின் சிஇஓ பொறுப்பிலிருந்து தான் விலக இருப்பதாகவும், அப்பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க இருப்பதாக அறிவித்தார். அதேபோல் ட்விட்டரின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, ட்விட்டரின் தலைவர் மற்றுத் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ட்விட்டரின் புதிய சிஇஓவாக லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த லிண்டா யாக்கரினோ?

LinkedIn தளத்தில் கிடைத்த தகவலின் படி, இவர் NBC யுனிவர்சல் என்ற நிறுவனத்தில் கடந்த 2011 முதல் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் அந்த நிறுவனத்தில் விளம்பரத் துறையின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் தான் தனது பணியை விட்டு வெளியேறி இருக்கிறார். இதற்கு முன்பாக டர்னர் என்ற நிறுவனத்தில் 19 ஆண்டுகள் வேலை செய்த அனுபவம் இவருக்கு இருக்கிறது. அங்கு அவர் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களை மேற்பார்வையிட்டு சிறப்பாக வழிநடத்தியுள்ளார். 

பெரிய பிராண்டுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு, தயாரிப்புகளை விற்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் விளம்பரம் செய்ய அவர்களை சம்மதிக்க வைப்பது போன்றவற்றில் இவரது பணி குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் எலான் மஸ்க் லிண்டா பேட்டி கண்டார். அப்போது, அவரை பார்வையாளர்கள் மத்தியில் புகழ்ந்து தள்ளி எலான் மஸ்க்கு பெரும் கைதட்டல்களை பெற்றுதந்தார். அதேபோல், தற்போது ஆறுபது வயதான லிண்டா யாக்கரினோவா, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர். ட்ரம்ப் அதிபராக இருந்தபோது அவர் நியமித்த அதிபர் கவுன்சில் ஆப் ஸ்போர்ட்ஸ் ஃபிட்னஸ் மற்றும் ஊட்டச்சத்து குழுவில் லிண்டாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Penn State University பல்கலைக்கழகத்தில் Liberal Arts and Tele communications என்ற துறையில் பட்டம் பெற்ற இவர், விளம்பரங்களை எப்படி மேலும் சிறப்பாக செய்வது என்பதில் கைதேர்ந்தவராவார். எலான் மஸ்கின் தீவிர ரசிகையான இவர், சமீப காலங்களாகவே ட்விட்டரின் தலைமை பொறுப்புக்கு வரப்போகிறேன் என நண்பர்களிடம் தெரிவித்து வந்த நிலையில், அதை தற்போது எலான் மஸ்க்கும் உறுதிப்படுத்தியுள்ளார். 

லிண்டா யாக்கரினோ அமெரிக்காவின் சில பெரிய ஊடகங்களின் தரவரிசைப் பட்டியலில் படிப்படியாக உயர்ந்து, ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் சிறந்த பெண்மணிக்கான முன்மாதிரியாக மாறுவார் எனக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com