#JUST IN : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்.17-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்..!

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
Published on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26/1 கீழ் சட்டமன்ற பேரவையின் அடுத்தக்கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை வளாகத்தில் கூட்டியுள்ளேன். அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் வாசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2026 பிப்ரவரி 20-ந் தேதி பேரவை விதி 193/1 கீழ் 2026-27 ஆம் ஆண்டுக்கான முன்பண மாணியக்கோரிக்கையும், பேரவை விதி 189/1 கீழ் 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகளும் சட்டமன்றத்தில் வாசிக்கப்படும். என்னுடைய தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி அனைத்து தலைவர்கள் முன்னிலையில் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

எல்லாமே நேரலை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்றம் தொடங்கிய நாள் முதல் அனைத்து நிகழ்வுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகில் எங்கு இருந்தாலும் எந்த தேதியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் செய்யப்பட்டு உள்ளது. இதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com