சர்வதேச மகளிர் தினம் - மாமல்லபுரத்தில் கட்டணம் இல்லை!

சர்வதேச மகளிர் தினம் - மாமல்லபுரத்தில்  கட்டணம் இல்லை!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண இன்று கட்டணம் வசூலிக்கப்படாது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை சலுகைகளை வழங்கி வருகிறது. இன்றைய தினம், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐந்துரதம்,கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் அர்ஜுனன் தபசு ஆகியகுடவரை சிற்பங்கள் அமைந்துள்ளன. இவற்றை கண்டு ரசிப்பதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. சுற்றுலாவை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது.

பல்லவர் காலத்தில் பிரபலமாக இருந்த பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும் பழமையான கோயிலை உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது, மேலும் இந்த பாறைக் கோயில்கள் தென்னிந்தியாவின் புனிதமான இடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.



ஐந்து ரதங்களைக்' குறிக்க 'பஞ்ச ரதங்கள்' என்ற பெயரும் பயன்படுத்தப்படலாம். திரௌபதி ரதம் என்பது முதல் ரதத்தின் பெயர், இது பிரதான கதவுக்குள் காணப்படுகிறது.

மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறி்ப்பிடத்தக்கது. சமீபத்தின் வெளிநாட்டு பயணிகள் வருகையில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி மாமல்லபுரம் கடற்கரை கோவில் இந்திய அளவில் அதிக வெளிநாட்டு பயணிகள் கண்டுகளித்தனர்

மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com